Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Hibiscus Shampoo at Home: என்ன பன்னாலும் முடி கொட்டுதா? இந்த ஹோம் மேட் செம்பருத்தி ஷாம்பை யூஸ் பண்ணுங்க.. அப்பறம் பாருங்க மாயாஜாலத்த....!!!

Nandhinipriya Ganeshan June 09, 2022 & 14:50 [IST]
How to Make Hibiscus Shampoo at Home: என்ன பன்னாலும் முடி கொட்டுதா? இந்த ஹோம் மேட் செம்பருத்தி ஷாம்பை யூஸ் பண்ணுங்க.. அப்பறம் பாருங்க மாயாஜாலத்த....!!!Representative Image.

How to Make Hibiscus Shampoo: நானும் என்னென்னமோ ட்ரை பண்ணிட்டேன் முடி உதிர்வது மட்டும் நிக்கவே மாட்டங்கிது என்று வருத்தப்படுறீங்களா? கவலையை விடுங்க. இந்த ஹோம் மேட் செம்பருத்தி ஷாம்பூவை (sembaruthi shampoo in tami) பயன்படுத்தி பாருங்க முடி உதிர்வு அறவே நின்றுவிடும். இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் இருக்கும் அழுக்கு சுத்தமாக வெளியேறி, உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைத்து, தலையில் பொடுகு உருவாக்கத்தை தடுத்து, முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், இது கெமிக்கல் ஃப்ரீ என்பதால் எந்த வித பக்கவிளைவுகளும் இருக்காது. 

செம்பருத்தி முடி வளர்ச்சியில் எந்த அளவிற்கு பங்காற்றுகிறது என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இப்போது இந்த ஷாம்பூவை (sembaruthi shampoo at home) எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

பூந்திக் கொட்டை 6-7 (நுரை வருவதற்காக சேர்க்கப்படுகிறது) எடுத்து இடித்து உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு, அந்த ஓட்டை மட்டும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு கொள்ளுங்கள். இதோடு, 1 ஸ்பூன் வெந்தயம், 3 சீயக்காய் போட்டு ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற (Hibiscus Shampoo Ingredients) வைக்கவும். இதை இரவு நேரத்தில் செய்யலாம். பின்னர், மறுநாள் காலை இந்த பொருட்கள் அனைத்து தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். 

இப்போது 5 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளவும் அது எந்த கலராக இருந்தாலும் சரி, ஆனால் சிகப்பு கலர் எல்லாவற்றையும் விட அதிக பயன் கொண்டது. அந்த பூக்களின் இதழ்களை அந்த தண்ணீரில் போட்டு அடுப்பி வைத்து 7 லிருந்து 8 நிமிடம் கொதிக்க விடவும். இந்த நேரத்தில் தண்ணீர்ன் நிறம் சிவப்பாக மாறி இருப்பதை காணலாம். அதன்பின், அடுப்பை அணைத்துவிட்டு அந்த தண்ணீரை வடிகட்டி ஆற வையுங்கள். ஆறிய பின்பு உடனே பிரிட்ஜில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையான செம்பருத்தி ஷாம்பு (hibiscus shampoo homemade in tamil) ரெடி..

நீங்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தேவைப்படும் போது ஷாம்பு போலவே தலைக்கு தேய்த்து குளிக்கலாம். அப்படி இல்லை என்றால், தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த ஷாம்புவை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கலாம். உங்களுக்கு எது விருப்பமோ அதை பின்பற்றுக் கொள்ளுங்கள். பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரங்களுக்கு இந்த இயற்கையான ஹோம் மேட் செம்பருத்து ஷாம்பு கெட்டுப் போகாமல் இருக்கும். 

இதை முயற்சி செய்து பாருங்க.. சில நாட்களில் முடி உதிர்வது நின்று, நீளமான முடி வளர்ந்து இருப்பதை கண்கூட (hibiscus shampoo for hair growth) பார்ப்பீர்கள். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்