Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nayanthara Beauty Tips Tamil: நயன்தாராவின் பளிச்சென்ற மற்றும் பளபளப்பான சருமத்தின் ரகசியம்!!

Nandhinipriya Ganeshan June 08, 2022 & 19:30 [IST]
Nayanthara Beauty Tips Tamil: நயன்தாராவின் பளிச்சென்ற மற்றும் பளபளப்பான சருமத்தின் ரகசியம்!!Representative Image.

Beauty and Makeup Secrets of Nayanthara: நயன்தாராவின் என்ன அழகான மற்றும் மென்மையான சருமம். இந்த ஜொலிக்கும் சருமத்திற்கு பின்னால் தினமும் அவருடைய கடின முயற்சி உள்ளது. பல நேரங்களில் மேக்கப் இல்லாமல் கூட இருப்பாராம். இயற்கை அழகு இருக்கும் பொழுது மேக்கப் தேவையா? என்னதான் 37 வயது ஆனாலும் இன்னமும் இளமை மாறாது ஜொலிக்கும் சருமத்துடன் உலா வரும் முன்னணி நடிகையின் அழகு ரகசியங்களை (nayanthara's beauty secrets) பற்றி பார்க்கலாம். 

சன்ஸ்கிரீன்: அவர் ஒரு பிரபலம் என்பதால், வெயிலில் வேலை செய்ய வேண்டியது இருக்காது என்று கிடையாது. படப்பிடிப்பின் போது சில நேரங்களில் கடுமையான வெயிலாக இருந்தாலும் சமாளித்து நடித்தாக வேண்டும். ஆனால், அதற்காக அவருடைய வேலையை தவிர்க்க முடியாது அல்லவா! அதற்காக தான் நயன் சில யுக்திகளை எப்போதும் தவறாமல் பின்பற்றுவாராம். எப்போது வெளியில் செல்லும்போதும் சருமத்தை பாதுக்காக்கும் சன்ஸ்கிரீன் மற்றும் பிற சரும மாஸ்க்குகளை (Nayanthara's Skin Care) பயன்படுத்துவாராம்.

ஃபுரூட் ஜூஸ்: உடலை நீரேற்றமாகவும், தோலை ஈரப்பதமாகவும் வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிப்பாராம். அதோடு, நல்ல நீரேற்றத்திற்காக தினமும் வைட்டமின் சி நிறைந்த ஃபுரூட் ஜூஸ் குடிப்பாராம். மேலும், நயன்தாரா நியூட்ரோஜினா (Neutrogena) மற்றும் கிளிஞ்ச் (clinch) போன்ற தயாரிப்புகளை தான் தனது சருமத்திற்கு பயன்படுத்துவாராம். 

CTM ரொட்டீன்: எவ்வளவு பிசியான நாளாக இருந்தாலும், ஷூட்டிங் இல்லையென்றாலும் சரி, இந்த பழக்கத்தை நயன்தாரா தொடர்ந்து பின்பற்றி (actress nayanthara beauty secrets) வருகிறார். CTM என்பது கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங் என்று மூன்று விதமான சருமப் பராமரிப்பு வழிமுறைகளைக் குறிக்கின்றன.கிளென்சிங் செய்வது சருமத்தில் உள்ள மாசு, அழுக்குகளை நீக்கி, சுத்தமாக்கும். டோனிங் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்கும். மாயிஸ்ச்சரைசிங் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

லிப்ஸ்டிக்: நயன் சாதாரண பெண்ணாக வாழ விரும்பினாலும், லிப்ஸ்டிக் கலரை தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அவருடைய விருப்பம் மற்ற பெண்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பிரகாசமான அழகான சிவப்பு நிற உதட்டுச்சாயத்திற்கு பதிலாக பளபளப்பான பழுப்பு நிற (brown shade) உதட்டுச்சாயத்தை தான் அவர் விரும்புவாராம். 

கண் அழகு: கண்னை அழகுப்படுத்துவதற்கு என்று  என்னதான் பல விதமான மேக்கப் பொருட்கள் வந்திருந்தாலும் நயன் பயன்படுத்துவது என்னவோ இயற்கையான மை (Nayantha Eye Makeup) தானாம். இதனால் தான் மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில், இவருடைய கண்கள் மட்டும் தனித்துவமாக தெரிகிறது.

பியூட்டி காஸ்கெட்டிக்ஸ்: அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதிலும் நடிகைகள் சொல்லவே வேண்டாம். ஆனால், நயன் பயன்படுத்துவது எல்லாமே ஆயுர்வேதிக் காஸ்கெட்டிக்ஸ் மட்டும் தானாம். இதுதான் அவருடைய அழகை மேலும் மெருகூட்டுகிறது. இவர் கேரளத்தை சேர்ந்தவர் என்பதால், கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவதாக (Nayanthara Hairstyle) சொல்கிறார்கள். 


Nayanthara Fitness Secret: நயன்தாராவின் சிம்பிளான ஃபிட்னஸ் சீக்ரெட்...!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்