Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே எளிதாக முறையில் மயோனிஸ் செய்யலாம்…! சிம்பிளா முறையில் ஐந்தே நிமிடத்தில்..!

Gowthami Subramani July 28, 2022 & 18:46 [IST]
வீட்டிலேயே எளிதாக முறையில் மயோனிஸ் செய்யலாம்…! சிம்பிளா முறையில் ஐந்தே நிமிடத்தில்..!Representative Image.

How to Make Mayonnaise without Egg at Home: மயோனிஸ், இப்போது பெரும்பாலும் பல பிராண்டுகளில் கடைகளில் கிடைக்கிறது. ஆனால், இவற்றில் முட்டையை சேர்த்தோ, சேர்க்காமலோ செய்யலாம். மயோனிஸை எப்படி முட்டை சேர்த்து மற்றும் முட்டை இல்லாமல் என இரண்டு வகைகளிலும் தயாரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக, மேலை நாடு உணவுகளில் மயோனிஸ் பயன்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவிலும் பெரும்பாலான மக்கள் இதனை விரும்பி உண்ணுகின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே, இந்த மயோனிஸை விரும்பி உண்ணு வருகின்றனர்.

ஆரோக்கியம் முக்கியம்

எந்த பொருளாக இருந்தாலும், கடையில் வாங்கி சாப்பிடுவது என்பது மிக முக்கியமான ஒன்று. சிறிய கடையாக இருந்தாலும், பெரிய கடையாக இருந்தாலும், ஆரோக்கியம் என்பது முக்கியமானதாக இருக்க வேண்டும். அதே போல, சில ஹோட்டல்களில் மயோனிஸை முட்டை சேர்த்தும், சேர்க்காமலும் செய்து விற்பனை செய்வர். அவற்றை எளிதான முறையில் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.

முட்டை சேர்த்த மயோனிஸ்

இதில் முட்டை சேர்த்த மயோனிஸ் தயாரிக்கும் முறைகளைப் பற்றி காண்போம்.

தேவையான பொருள்கள்

எண்ணெய் – 1 கப்

முட்டை - 1

சர்க்கரை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்

வினிகர் – 1 டீஸ்பூன்

கடுகுப்பொடி – ¼ டீஸ்பூன்

முட்டை கலந்த மயோனிஸ் செய்யும் முறை

முதலில், முட்டையை எடுத்துக் கொண்டு, அதன் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இரண்டையும் தனித் தனியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிதளவு எண்ணெய், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, உப்பு தேவையான அளவு, ¼ டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் வினிகர், கடுகுப் பொடி ¼ டீஸ்பூன் போன்றவற்றைக் கலந்து மிக்ஸியில் 40 நொடிகள் அரைத்துக் கொள்ள வேண்டும். இது முட்டை கலந்த மயோனிஸ் தயாரானது.

இதே போல, முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து மயோனிஸ் செய்ய, தனியாக எடுத்து வைத்த மஞ்சள் கருவில் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின், அதனுடன் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டவற்றை அதே அளவில் சேர்த்து பின்னர் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து எடுத்தால் மஞ்சள் கரு சேர்த்த மயோனிஸ் ரெடியாகி விடும்.

முட்டை இல்லாத மயோனிஸ்

மயோனிஸை முட்டை கலக்காமல் செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தேவையான பொருள்கள்

சமையல் எண்ணெய் (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தவிர) – 1 கப்

பால் – 1 கப்

(குறிப்பு: இரண்டுமே சிறிது குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். எனவே, அதனை 5 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.)

சர்க்கரை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சைச் சாறு – அரை மூடி

வினிகர் – 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – சிறிதளவு

பூண்டு – 2 பல்

முட்டை இல்லாத மயோனிஸ் செய்யும் முறை

பால் மற்றும் எண்ணெயை ஒரு குறிப்பிட்ட அளவு சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கலக்கவும்.

இதனுடன், 2 டீஸ்பூன் அளவு வினிகர், சர்க்கரை ¼ ஸ்பூன், மிளகுத்தூள் ¼ டீஸ்பூன், சிறிது சிறிதாக நறுக்கி வைத்த இரண்டு பல் பூண்டு, மற்றும் உப்பு தேவையான அளவு இவை அனைத்தையும் சேர்த்து 40 நொடிகள் சுழற்றி எடுத்தால், முட்டை சேர்க்காத மயோனிஸ் தயாராகி விடும்.

வேண்டுமென்றால், இந்த மயோனிஸில் சிறிது வித்தியாசச் சுவை வேண்டும் என்றால், புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு எளிமையான முறையில், வீட்டிலேயே மயோனிஸ் தயாரித்து சாப்பிடலாம். இவ்வாறு வீட்டில் செய்யும் போது ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்