Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிச்சா இத்தனை நன்மைகளா..?

Gowthami Subramani July 27, 2022 & 20:00 [IST]
வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிச்சா இத்தனை நன்மைகளா..?Representative Image.

Benefits of Drinking Lemon Juice in Empty Stomach in Tamil: தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால், என்னென்ன பயன்களைப் பெறலாம் என்பதை இதில் பார்ப்போம்.

எலுமிச்சைப் பழத்தில் மிகச் சிறப்பான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை நமது ஆரோக்கிய நலனுக்காக எடுத்துக் கொள்வது சிறந்தது. காலையில் நாம் எலுமிச்சைப் பழத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

எலுமிச்சையின் பயன்கள்

பொதுவாக எலுமிச்சைப் பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் செரிமானத்திற்கு உதவக் கூடிய பித்த நீரைச் சுரக்க உதவுகிறது.

செரிமானப் பாதையில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

காலையில் எழுந்தவுடன் இதனைக் குடிக்கும் போது குடலியக்கம் சீராக இருப்பதை உணரலாம்.

காலையில் எலுமிச்சைச் சாறை குடிப்பதன் முறைகள்

முதலில் வெது வெதுப்பான நீரை எடுத்துக் கொன்டு அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து கொள்ள வேண்டும்.

அதில் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் பருக வேன்டும்.

இதன் மூலம், எலுமிச்சையில் இருக்கக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்க உதவுகிறது.

இதன் காரணமாகவே, உடல் எடை மிக வேகமாகக் குறையும். எனவே, உடல் எடை விரைவாக குறைய வேண்டும் என நினைப்பவர்கள் இவ்வாறு செய்வதன் மூலம், எளிமையாக உடல் எடையைக் குறைக்க முடியும்.

மேலும், எலுமிச்சைப் பழச்சாறானது இரத்தத்தில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால், சிறுநீரில் அளவை அதிகரிக்கும். அதன் மூலம் நம் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வழிவகுக்கிறது. மேலும், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், கல்லீரலில் நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்க உதவுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்