Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Rose Water in Tamil: ரெண்டே பொருள் தான் இயற்கையான ரோஸ் வாட்டர்/பன்னீர் ரெடி...!! 

Nandhinipriya Ganeshan June 23, 2022 & 16:00 [IST]
How to Make Rose Water in Tamil: ரெண்டே பொருள் தான் இயற்கையான ரோஸ் வாட்டர்/பன்னீர் ரெடி...!! Representative Image.

How to Make Rose Water in Tamil: பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து பேக், ஸ்கிரப் எல்லாவற்றிற்கும் பெரும்பாலும் ரோஸ் வாட்டரை தான் பயன்படுத்துவோம். ஆனால், கடையில் வாங்கிய ரோஸ் வாட்டரில் கெமிக்கல் கலந்திருக்கும். எனவே, வீட்டிலேயே இயற்கையான ரோஸ் வாட்டரை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

ரோஸ் வாட்டரின் பயன்கள்:

அரோமா தெரபியில் கூட பெண்கள், ஆண்கள் யாராக இருந்தாலும் ரோஸின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே இருந்தால் ஹார்மோன் இயக்கத்துக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தினால் மினுமினுப்பாகவும், பொலிவுடனும் இருக்கும்.

கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் உண்டாகும் அலர்ஜி, முகப்பரு, எரிச்சல், போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ரோஸ் வாட்டர் அருமருந்து. 

சரும பராமரிப்புக்கு நாம் பயன்படுத்தும் பேக், ஸ்கிரப் போன்றவற்றுடன் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால், அதன் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். 

ரோஸ் வாட்டரை உதட்டில் தடவி மசாஜ் செய்தால், உதடுகள் ரோஜாப்பூ போன்று பிங்க் நிறத்திலும், மென்மையாகவும் இருக்கும்.

 

ரோஸ் வாட்டரை எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

பிங்க் நிற நாட்டு ரோஜாப்பூக்கள் - 50 

தண்ணீர் - 2 லிட்டர்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் ரோஜா இதழ்களை போட்டு 20-30 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.

தேவைப்பட்டால் பாதாம் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி பிறகு எடுத்து வடிகட்டி ஆற வைக்கவும்.

ஆறியவுடன் ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

அவ்வளவு தான் ரோஸ் வாட்டர் ரெடி (how to make rose water at home for eyes)..


அனைவரும் விரும்பும் டேஸ்ட்டான ரோஜா பூ ஜாம்… இதை சேர்த்துக் கொண்டால் உடலில் இந்த பிரச்சனையே வராது….


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்