Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Watermelon Pizza: தர்பூசணி பீட்சா செய்வது எப்படி ...??

Nandhinipriya Ganeshan June 12, 2022 & 12:00 [IST]
How to Make Watermelon Pizza: தர்பூசணி பீட்சா செய்வது எப்படி ...??Representative Image.

How to Make Watermelon Pizza: சம்மர் சீசன் வந்துவிட்டது, மேலும் சில புத்துணர்ச்சியூட்டும் சம்மர் சீசன் பழங்களை சுவைப்பதற்கான நேரமும் வந்துவிட்டது. இந்த கொழுத்தும் வெயிலை சமாளிக்க அதிகம் தண்ணீர் நிறைந்த பழங்களை சாப்பிடுவது வழக்கம். எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடாமல், கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடுவோமே. தர்பூசணி எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பழம். இதை வைத்து ஒரு தர்பூசணி பீட்சா செய்யலாம் வாங்க. இதை 10 நிமிடத்தில் செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1

ஸ்ட்ராபெரி - 4

தயிர் - 1/4 கப்

தேன் - 3 ஸ்பூன்

தர்பூசணி - வட்டமாக ஒரு துண்டு

புளூபெர்ரி - 1/4 கப்

புதினா - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பெரிய தர்பூசணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுபகுதியில் ஒரு வட்ட வடிவில் தர்பூசணியை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, தயிர், தேன் மூன்றையும் நன்றாக அடித்து கொள்ளுங்கள்.

தர்பூசணி துண்டை ஒரு தட்டில் வைத்து அதன் மீது இந்த நாம் தயாரித்த கலவையை ஒரு கரண்டி கொண்டு மெதுவாக பரப்பி கொள்ளுங்கள். 

அதன் மேல் நறுக்கி வைத்த புளூபெர்ரி, வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி மூன்றுறையும் தூவி விடவும்.

பின்னர், அதன் மீது புதினாவை தூவி, ஆறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். சத்தான சுவையான தர்பூசணி பீட்சா (watermelon pizza recipe) ரெடி....

புளூபெர்ரி இல்லையென்றால் உங்க வீட்டில் வேறு எந்த பழம் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். 


How to Make Nungu Payasam in Tamil: சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஜில்லுனு நுங்கு பாயாசம்... இப்படி செஞ்சி பாருங்க...!!


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்