Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பக்கவாத நோய் வராமல் எப்படி தடுக்கலாம்..? இதோ சில வழிமுறைகள்…

Gowthami Subramani October 28, 2022 & 13:30 [IST]
பக்கவாத நோய் வராமல் எப்படி தடுக்கலாம்..? இதோ சில வழிமுறைகள்…Representative Image.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாரபட்சம் பாக்காமல் பாதிப்பது வாத நோய். இது பேச்சு வழக்கில் பக்கவாத நோய் என கூறப்படுகிறது. இது மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தபட்ட நோயாகும். பெண்கள் முதியவர்கள் மத்தியில், இந்த வாத நோய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாரடைப்புக்கு அடுத்த படியாக, அதிகம் பாதிக்கும் நோய் வாத நோய் ஆகும். பக்கவாத நோயை குணப்படுத்த சில மருத்துவ ரீதியான வழிமுறைகள் அவசியம் ஆகும். அதே சமயம், இந்த பக்கவாத நோயினை வராமல் தடுக்கவும் முடியும். வாத நோயினை வராமல் எப்படி தடுக்கலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

பக்கவாத நோயினை எப்படி தடுக்கலாம்?

✤ பொதுவாக வாதநோய் என்பது மூளை மற்றும் நரம்பியல் தொடர்பான நோயாகக் கருதப்படுகிறது. எனவே, வாத நோய் வராமல் தவிர்க்க இரத்த அழுத்த நோய் வராமல் தவிர்க்க வேண்டும்.

✤ இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் அதற்கு சரியான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

✤ இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக உப்பை எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே, உணவில் கணிசமான அளவில் உப்பைக் குறைக்க வேண்டும்.

✤ பொட்டாசியம் நிறைந்த காய்கறிகள், பழங்களை உட்கொள்வதன் மூலமும், வாத நோய் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

✤மேலும், இவர்கள் கொழுப்பு சார்ந்த இறைச்சியை சாப்பிடக் கூடாது. அதன் படி, மது அருந்துவது, புகை பிடிப்பது, போதை பழக்கம் உள்ளிட்டவை அரவே இருக்கக் கூடாது.

✤ மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியம் ஆகும். எனவே, உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா, தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது நல்லது.

✤ மலச்சிக்கல் வராமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

✤ இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு மூக்கடைப்பு தொந்தரவு இருப்பின், அலர்ஜி நீக்கி மருந்து, மூக்கு சொட்டு மருந்து உள்ளிட்டவற்றை மருத்துவ ஆலோசனையும் பெற்று சரி செய்து கொள்ள வேண்டும்.

இந்த முறைகளின் மூலம் பக்கவாத நோய் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்