Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பல் கூட துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்க? அப்ப இது உங்களுக்கான பதிவு தான்...

Nandhinipriya Ganeshan October 26, 2022 & 09:30 [IST]
பல் கூட துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்க? அப்ப இது உங்களுக்கான பதிவு தான்...Representative Image.

நம்மில் பலருக்கும் காலை எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். அதுவும் பல் கூட துலக்காமல் நிறைய பேர் பெட் காஃபி குடிப்பார்கள். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீயோ அல்லது காஃபியோ குடிப்பது உங்களுக்கு அப்போது வேண்டுமானால் புத்துணர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அது எவ்வளவு தீங்கானது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நாம் அன்றாடம் பருகும் டீயில் காஃபின் என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருக்கிறது. இது நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். 
 

பல் கூட துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்க? அப்ப இது உங்களுக்கான பதிவு தான்...Representative Image

ஒருவர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் முதல் மற்றும் முக்கிய பிரச்சனை அசிடிட்டி. ஏனென்றால் நாம் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது இரைப்பையில் அமிலம் அதிகளவில் சுரக்கப்படும். இது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்துவதோடு உடலில் செரிமான அமிலத்தையும் பாதிப்படைய செய்யும்.

அதுமட்டுமல்லாமல், வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் செரிமான மண்டலம் படிப்படியாக பலவீனமாகி பெரிய அளவில் பாதிப்படையும். நம்மில் பலரும் வெயில் காலங்களில் வயிற்று எரிச்சல், வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திருப்போம். இதற்கு காரணமும் வெறும் வயிற்றில் டீ குடிப்பது தான். 

பல் கூட துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்க? அப்ப இது உங்களுக்கான பதிவு தான்...Representative Image

மேலும், வெறும் வயிற்றில் டீ குடித்துவந்தால், பசியுணர்வு முற்றிலும் அழிக்கப்பட்டு, பிற்காலத்தில் மோசமான பக்கவிளைவுகளை உண்டாக்கக்கூடும். இப்படியே ஒருவர் தொடர்ந்து டீ குடித்துவந்தால், தூக்கத்தை இழந்து, மனஅழுத்தத்திற்கு ஆளாவீர்கள். 

குறிப்பாக, வெறும் வயிற்றில் டீ குடிக்கும்போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்படும். இது உங்களை சர்க்கரை நோயாளி ஆவதற்கும் வழிவகுத்துக்கொடுக்கும். எனவே, காலை எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து உங்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளில் ஈடுபடுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்