Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Relieve Constipation Naturally in Tamil: உங்களுக்கு பைல்ஸ் வரக்கூடாதுன்னா இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க….

Nandhinipriya Ganeshan July 25, 2022 & 17:08 [IST]
How to Relieve Constipation Naturally in Tamil: உங்களுக்கு பைல்ஸ் வரக்கூடாதுன்னா இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க….Representative Image.

How to Relieve Constipation Naturally in Tamil: பைல்ஸ் நோய்க்கு (மூல நோய்) முதல் காரணமே மலச்சிக்கல் தான். எனவே, உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். தினமும் ஒரு முறை கூட மலம் கழிக்காமல் இருப்பது, மலத்தை கழிக்க சிரமப்படுவது, மலம் கடினமாக இருப்பது போன்றவை மலச்சிக்கலுக்கான அறிகுறிகளாகும். மலச்சிக்கலின் போது நீங்க அதிகமாக முக்கி மலம் கழிப்பதால் மூல நோய் ஏற்படுகிறது. எனவே, பைல்ஸ் வரக்கூடாது என்று நினைத்தால் கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து குடியுங்கள். விரைவில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உடலில் நீர்பற்றாக்குறையால் கூட மலச்சிக்கல் ஏற்படும். எனவே, தினமும் 2-3 லிட்டர் தண்ணீராவது குடிங்க. இதனால், உடல் நீரேற்றத்துடன் வைப்பதோடு, ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இதனால், மலம் எளிதில் வெளியேறி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்படுவர்கள், வெதுவெதுப்பான பாலில் விளக்கெண்ணெய் அல்லது ½ டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து குடித்து வர, குடல் சுத்தமாகும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரவு முழுவதும் ஊற வைத்த 6-7 உலர்ந்த கொடி முந்திரியை சாப்பிட்டு, ஊற வைத்த நீரையும் குடிங்க. இது மலத்தை மென்மையாக்கி எளிதில் வெளியேற்ற உதவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்