Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டால் ஆபத்தா?

Nandhinipriya Ganeshan July 25, 2022 & 12:15 [IST]
நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டால் ஆபத்தா?Representative Image.

திருமணமான அனைத்து தம்பதிகளுக்கும் மனதில் தோன்றும் முதல் கேள்வி எவ்வளவு நேரம் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்? ஒருவேளை நீண்ட நேரம் வைத்துக் கொண்டால் ஆபத்தா? உடலுறவு என்பது தம்பதியர்களின் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு விஷயம். அவர்களின் காதலின் ஆழம். ஆனால், சினிமா மற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவை உடலுறவினை பெரிதுபடுத்திக்காட்டி, தவறான பிம்பத்தை விதைத்து விட்டது. எனவே, ஒவ்வொரு தம்பதியர்களும் தங்களுடைய உறவின் நேரம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பொதுவாக பிடித்த விஷயங்களை செய்யும் போது நாம் நேரம் காலம் எல்லாம் பார்ப்பது கிடையாது; அப்படியே மூழ்கிவிடுகிறோம். அதுபோல தான் செக்ஸ் என்பதும். உடலுறவுக்கு நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. இயல்பாக, புதிதாய் கல்யாணம் ஆன தம்பதியர்கள் முதல் மூன்று மாதங்களும் இனிமையான தாம்பத்திய வாழ்க்கையை விரும்புவார்கள்.

Most Read: முதல் முறையாக உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் வலியை குறைக்க டிப்ஸ்..

அதிலும் ஆண்கள் மனைவியுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். காதல் திருமணமாக இருந்தால் பிரச்சனை இல்லை, அதுவே பெற்றோர்களால் செய்து வைத்த திருமணமாக இருந்தால் கொஞ்சம் கூச்சம் என்பது இருக்க தான் செய்யும். எனவே, உங்க மனைவியின் மனநிலை மற்றும் விருப்பம் என்பது இதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மேலும், இல்லற வாழ்வில் இருவருக்கும் முழு ஈடுபாடு இருந்தால் மட்டுமே முழுபலனை பெற முடியும். அதனால், ஆரம்பத்திலேயே உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இதில் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டு, அதை பொறுத்து உங்கள் உறவு நேரத்தை முடிவு செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்வதற்காக அவர்களை வற்புறுத்த கூடாது. பின்னாளில் இதுவே உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும்.

Most Read: ஆடி மாசத்துல ஏன் புதுசா கல்யாணமான தம்பதிகள் ஒன்று சேரக் கூடாது?

ஒருவேளை உங்க மனைவிக்கும் நீண்ட நேர உறவில் விருப்பம் இருந்தால், முதலில் முன் விளையாட்டுகளோடு ஆரம்பியுங்கள். ஏனென்றால், உங்களுக்கு விந்து விரைவாக வெளியேறுவதால் இருந்தால் இது உதவியாக இருக்கும். இவ்வாறு முன் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலமும் உங்களுடைய உறவு நேரத்தை அதிகரிக்கலாம்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்