Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் இழந்த முடியை மீண்டும் பெறலாம்..

Nandhinipriya Ganeshan September 03, 2022 & 11:00 [IST]
இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் இழந்த முடியை மீண்டும் பெறலாம்..Representative Image.

Hair Loss Treatment in Tamil: முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இப்போதெல்லாம், பெம்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவநிலையிலும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சராசரியாக, ஒரு நாளைக்கு சுமார் 50-100 முடிகள் உதிர்வது சாதாரணமானது. இருப்பினும், முடி உதிர்தல் அல்லது வழுக்கைத் திட்டுகள் நீங்கள் முடியை இழக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகளாகும். சில சமயங்களில் உங்கள் உடல் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிக முடி உதிர்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் அதன் தீவிரத்தை வெளிப்படுத்தும். எனவே, அசால்ட்டாக இருக்காமல் உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது இந்த நிலைமைகளில் இருந்து தப்ப உதவும். 

அதுமட்டுமல்லாமல், முடி உதிர்வதற்கு ஹேர் ஸ்டைலிங் மற்றும் கலரிங் பொருட்கள் உள்ள ரசாயனங்கள் கூட காரணமாக இருக்கலாம். எனவே, சரியான நோயறிதல் மற்றும் இயற்கை வீட்டு வைத்தியம் மூலம் முடி உதிர்வை குறைக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால், மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். 

முடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்கள்:

1. பிரசவம், கர்ப்பம், தைராய்டு பிரச்சினைகள், பிசிஓஎஸ் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்தால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. இதனால் முடி உதிரலாம்.

2. தாமிரம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் டி மற்றும் புரதங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடு.

3. தீவிர மன அழுத்தம் திடீர் மற்றும் மோசமான முடி (hair fall in tamil) உதிர்தலை ஏற்படுத்தும்.

4. அலோபீசியா அரேட்டா, டெலோஜென் எஃப்ளூவியம், ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகள் போன்ற மருத்துவ நிலைகள் கடுமையான முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன.

5. நச்சு இரசாயனங்கள் கொண்ட ஹேர்ஸ்டைலிங் பொருட்கள் முடி உதிர்வை ஏற்படுத்தும்.

6. உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், மனச்சோர்வு மற்றும் மூட்டுவலி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் கூட முடி கொட்டலாம்.

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்க:

உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கவும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் (hair fall tips in tamil) உட்கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க சில ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், இழந்த முடியை மீண்டும் பெறலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸில் அதிக அளவு இரும்பு, நார், துத்தநாகம், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவி செய்யும். உங்கள் தினசரி உணவில் ஓட்ஸை சேர்த்துக்கொள்வது, மீண்டும் முடி வளர்ச்சியை தூண்டப்பட்டு இயற்கையான அடர்த்தியான முடியை பெறலாம்.

முட்டை

முட்டை பயோட்டின், புரதம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகும், இவை அனைத்தும் உங்கள் முடி வளர்ச்சிக்கும் மற்றும் அதன் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல், இந்த சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வை குறைக்கவும், முடி நெகிழ்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது. நமது தலைமுடி 68% கெரட்டின் புரதத்தால் ஆனது, எனவே சேதமடைந்த முடியை மீண்டும் உருவாக்க முட்டை உதவுகிறது. மயிர்க்கால்கள் புரதத்தால் ஆனவை என்பதால், போதுமான அளவு புரதம் சாப்பிடுவதும் அவசியம். எனவே, தினமும் 1-2 முட்டை சாப்பிட்டுங்கள். இது கெரட்டின் உற்பத்தியை அதிகரித்து முடி உதிர்வை தடுத்து, மீண்டும் புதிய முடி உற்பத்தியாகும்.

பசலைக் கீரை

இரும்புச் சத்து குறைபாட்டால் கூட முடி உதிர்வு ஏற்படலாம். பசலைக்கீரையில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல், இதில் சேபம் உள்ளது, இது முடிக்கு சிறந்த இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் அதை கொட்டமாலும் பாதுகாக்கிறது. 

கேரட்

வைட்டமின் ஏ குறைபாட்டால் உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, முடியை வலுப்படுத்துகிறது, முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் முடி உதிர்தலில் இருந்து பாதுகாக்கிறது.

வால்நட்

வால்நட் பருப்பில் புரதம், பயோட்டின், மெக்னீசியம், வைட்டமின் பி1, பி6, பி9 மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உச்சந்தலையில் ஊட்டமளிப்பதற்கும் முடியின் வெட்டுக்களை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இதன் நன்மைகளை அனுபவிக்க தினமும் வால்நட்டை மார்னிங் அல்லது ஈவ்னிங் ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்ளுங்கள். அளவு விஞ்சி சாப்பிட வேண்டாம்.

முடி உதிர்வை எப்படி தடுப்பது?

1. கண்டிஷர்களில் அமினோ அமிலங்கள் இருக்கின்றன, அவை உங்கள் முடிகளை சேதம் மற்றும் வறட்சியிலிருந்து பாதுகாக்கும். எனவே, ஒரு நல்ல கண்டிஷனரைப் பயன்படுத்துவது உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக (hair fall solution in tamil) வைத்துக் கொள்ளவும், அவற்றை மென்மையாகவும்  மாற்றவும் உதவும். 

2. யோகா மற்றும் உடற்பயிற்சி முடி உதிர்வை தடுக்க சிறந்த வழி. எனவே, யோகாவில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள், அது உங்களுக்கு மனநிம்மதியையும் நேர்மறை எண்ணங்களையும் தரும்.

3. எல்லாவற்றிற்கும் மேலாக, முடி உதிர்வை கட்டுப்படுத்த முதலில் ஒரு நல்ல ஷாம்பூவை தேர்ந்தெடுங்கள். உங்களுடைய கூந்தலின் வகையை அறிந்து அதற்கேற்றார் போல் ஒரு நல்ல ஷாம்பூவை பயன்படுத்துங்கள். மேலும், பாரபென், சல்பேட் மற்றும் சிலிகான் போன்ற இரசாயனங்கள் கொண்ட ஷாம்பூவைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும்.

4. உங்களுடைய ஸ்கேல்ப் வகையின் அடிப்படையில் தலைக்கு குளிப்பது நல்லது. ஏனெனில், உலர்ந்த ஸ்கேல்ப்பில் அடிக்கடி ஷாம்பூ போட்டு குளிப்பது முடி உதிர்தல் மற்றும் பொடுகுக்கு வழிவகுக்கும். அதேப்போல், வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு குளிக்கவில்லை என்றாலும் அதே பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

5. ரொம்ப சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்கவும். இது உங்களுடைய தலையில் இருக்கும் இயற்கை எண்ணெயை அகற்றி, முடி உதிர்வை உண்டாக்கும். 

6. வாரத்திற்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெயை கொண்டு முடியை மசாஜ் செய்யுங்கள். இது தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வேர்களை வலுப்படுத்தவும் உதவும். உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தேவையான் அளவு எண்ணெயை தடவி, ஷவர் கேப்பால் மூடி 1-2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் லேசான ஷாம்பூவால் குளித்துவிடுங்கள்.

7. குறிப்பாக, முடி ஈரமாக இருக்கும் போது சீவவேண்டாம். ஏனெனில், அவ்வாறு நீங்கள் சீவும்போது தலைமுடி உடைய ஆரம்பிக்கும். மேலும், ஈரமான முடியில் கர்லிங் ராட்கள், ப்ளோ ட்ரையர்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

How to prevent hair fall for female naturally, how to prevent hair fall in rainy season, how to to prevent hair fall in summer, how to prevent hair fall at home in tamil, how to stop hair fall at home in tamil, how to stop seasonal hair fall in tamil, hair fall solution in tamil, hair fall in tamil, Hair Loss Treatment in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்