Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலையே உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க உதவும் ஸ்க்ரப்கள் தயாரிப்பது எப்படி?

Priyanka Hochumin September 02, 2022 & 18:20 [IST]
வீட்டிலையே உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க உதவும் ஸ்க்ரப்கள் தயாரிப்பது எப்படி?Representative Image.

Home Remedies for Body Scrub: எது மிக ஆரோக்கியமான தோல் அல்லது ஸ்கின் என்று சொல்லலாம் தெரியுமா? தோல் உரித்தல் (அதாவது Skin Exfoliation) என்பது ஆரோக்கியமான ஸ்கின் சிஸ்டத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். ஏனென்றால் இதன் மூலம் உங்கள் தோலின் ஒட்டுமொத்த பிரகாசத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தின் மேற்பரப்பில் அமைத்துள்ள டெட் ஸ்கின் செல்கள், ஆயில் மற்றும் அழுக்குகளை அகற்றும் எளிமையான வழியாகும். இந்த தோல் உரித்தல், சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் சில சருமப் பிரச்சனைகளில் இருந்து உங்கள் தோலை பாதுகாக்கிறது. 

உங்கள் சருமத்தை பராமரிக்க நிறைய எளிமையான வழிகள் உள்ளன. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் மக்கள் அதை பயன்படுத்தாது, பல நிறுவனங்கள் கெமிக்கல் மூலம் உருவாக்கும் அழகு சாதன பொருட்களையே பயன்படுத்துகின்றனர். அப்படி நீங்கள் அது போன்ற சாதனங்களை பயன்படுத்துவராக இருந்தால், இதை கவனிக்கவும். அந்த கெமிக்கல் இருக்கும் அழகு சாதன பொருட்கள் உங்கள் சருமத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும் மற்றும் தற்போது உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை மேலும் மோசமாக்கிவிடும். எனவே, இவற்றை தள்ளிவிட்டு உங்களது கிட்சேனில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே மிகவும் இயற்கையான முறையில் வீட்டிலையே ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். இது உங்களுக்கு பளபளப்பான, புதிய மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுகிறது. நீங்க தயாரிக்கும் ஒவ்வொரு ஸ்கர்ப்பிலும் சர்க்கரை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், அதில் உள்ள எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள், சருமத்தில் இருக்கும் கூடுதல் ஆயில், அழுக்கு மற்றும் தூசியை அகற்ற உதவுகிறது. மேலும் சருமத்தை ஜொலிக்க வைக்கிறது. 

வீட்டிலையே உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க உதவும் ஸ்க்ரப்கள் (homemade exfoliating body scrub) தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

கிரீன் டீ ஸ்க்ரப் (Green Tea Scrub):

கிரீன் டீ தினமும் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் அழுக்குகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க உதவும். அதே போல் கிரீன் டீயை ஸ்கர்ப் தயாரிக்க பயன்படுத்தி சருமத்தில் (herbal body scrub recipe) தடவினால், உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. ஏனென்றால் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் (anti-inflammatory properties) நிறைய இருக்கிறது. இந்த பண்புகள் மூலம், உங்கள் சருமத்தில் ஏற்படும் தோல் எரிச்சல், வீக்கம் மற்றும் தோல் சிவந்து போவதை தடுக்கவும் குறைக்கவும் உதவுகிறது. முகப்பருவை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கும் சரும சுரப்பு (sebum secretion), கிரீன் டீயில் இருக்கும் பாலிபினால்கள் அதைக் குறைத்து சருமத்தை பாதுகாக்கிறது. கூடுதலாக, கிரீன் டீயில் அதிக அளவு வைட்டமின் ஈ உள்ளதால் அது சருமத்தை ஊட்டமளித்தும் மற்றும் ஈரப்பதமாக்கியும் வைத்து உதவுகிறது. தேன் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கொண்டது. 

தயாரிக்கும் முறை:

  • ஐந்து நிமிடங்களுக்கு இரண்டு டீ பேக்குகளை சூடான நீரில் கொதிக்க விடவும், பின்பு அதை ஆறவிடவும்.
  • அதில் 4-5 டீஸ்பூன் பிரவுன் சுகர் மற்றும் 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
  • இந்த அனைத்து பொருட்களையும் கலந்து கொண்டு, அந்த கலவையை ஈரமான சருமத்தில் தடவவும்.
  • 3-5 நிமிடங்கள் மெதுவாக சருமத்தை கையால் தேய்த்து, பின்பு கழுவி விடுங்கள்.
  •  பளபளப்பான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற வாரத்திற்கு ஒருமுறை இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்தவும். 

தயிர் ஸ்க்ரப் (Yogurt Scrub):

தினசரி தயிர் தடவினால் உங்கள் சருமத்தில் பருக்கள் வராமல் தடுக்கலாம். தயிரில் உள்ள அதிக அளவு லாக்டிக் அமிலம் (lactic acid) சருமத்தின் மேல் இருக்கும் லேயரை அகற்ற உதவுகிறது. மேலும் அதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு (anti-inflammatory property) கருவளையங்களை குறைக்க மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. ஈஸ்ட் போன்ற நோய்க்கிருமிகளை ஏற்படுத்தக்கூடிய தோல் நோய்த்தொற்றுகளை அகற்ற தயிர் உதவுகிறது. 

தயாரிக்கும் முறை:

  • 1 டீஸ்பூன் தயிரில் (அல்லது yogurt) 2-3 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். 
  • பின்னர் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 3-4 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபா ஆயில் அல்லது பாதாம் ஆயில் சேர்க்கவும். 
  • பிறகு இந்த அனைத்து பொருட்களும் நல்ல பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
  • இதை உங்கள் உடல் முழுவதும் தடவி 3-4 நிமிடங்கள் கைகளால் சர்குலர் வடிவில் மெதுவாக மசாஜ் செய்யவும். 
  • வாரத்திற்கு 2-3 முறை இந்த ஸ்க்ரப் பயன்படுத்தி நல்ல முன்னேற்றத்தை காணுங்கள். 

எலுமிச்சை ஸ்க்ரப் (Lemon Scrub):

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, இயற்கையாகவே சருமத்தை பிரகாசமாக்கும் பொருளாகும். மேலும் இது சீரான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆண்டிசெப்டிக் குணங்கள் சருமத்தில் உள்ள டெட் ஸ்கின் செல்களை வெளியேற்ற உதவுகிறது. எலுமிச்சையில் இருக்கும் தாதுக்கள் (mineral) மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் (antioxidants) உங்கள் சருமத்தின் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் (how to make exfoliator at home) மேம்படுத்துகிறது. 

தயாரிக்கும் முறை:

  • ஒரு முழு எலுமிச்சையை எடுத்து, துண்டுகளாக்கி, அதன் சாற்றை ஒரு பாத்திரத்தில் பிழியவும். 
  • பின்பு அதில் 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும்.
  • அவற்றை நன்றாக கலந்து, அந்த கலவையை உங்கள் சருமத்தில் தடவவும். அதை 2-3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்யவும். 
  • இந்த ஸ்க்ரப் அதிக எண்ணெய் பசை சருமத்தை தடுக்க உதவும். உங்களுக்கு சென்சிடிவ் ஸ்கின் இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும்.

ஓட்ஸ் ஸ்க்ரப் ( Oatmeal Scrub): 

ஓட்ஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் டெட் செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் இதில் ஜிங்க் (Zinc) இருப்பதால், அது வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. மேலும் உங்கள் சருமத்தின் pH அளவை இயல்பாக்கவும் உதவுகிறது.

தயாரிக்கும் முறை:

  • ஒரு கிண்ணத்தில் ½ கப் ஓட்ஸ், 2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு கலக்கவும்.
  • இந்த ஸ்க்ரப்பை உங்கள் சருமத்தில் தடவி 2-3 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்யவும்.
  • பின்பு தண்ணீரால் நன்கு கழுவவும்.
  • இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதை பயன்படுத்தி நல்ல பலனைக் காணுங்கள்.

கடல் உப்பு ஸ்க்ரப் (Sea Salt Scrub):

கடல் உப்பு ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் என்பதால், அதை சருமத்தில் தடவும் பொழுது அழுக்குகளை (அல்லது grime) அகற்ற உதவுகிறது. கடல் உப்பில் உள்ள தாதுக்கள் சருமத்தை மென்மையாக்கவும் மற்றும் நீரேற்றத்தை மீட்டெடுக்கவும் வழிவகுக்கிறது. 

தயாரிக்கும் முறை:

  • 1 கப் கடல் உப்புடன் ½ கப் ஆலிவ் ஆயிலை சேர்க்கவும்.
  • பிறகு உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகளைச் சேர்க்கவும். இது விருப்பம் இருந்தால், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். 
  • அதை உங்கள் தோலில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 
  • தண்ணீரால் அதை நன்கு கழுவவும்.
  • உங்களுக்கு டிரை ஸ்கின்னாக இருந்தால் வாரம் ஒரு முறை, நார்மல் ஸ்கின்னாக இருந்தால் ஓரிரு வாரங்கள் மற்றும் ஆயிலி ஸ்கின்னாக இருந்தால் வாரத்திற்கு மூன்று முறை இந்த ஸ்கரப்பை பயன்படுத்தவும்.

காபி ஸ்க்ரப் (Coffee Scrub):

நாம் தயாரிக்கும் பல உடல் ஸ்க்ரப்களில் ஒரு விசேஷமான ஒன்று, காபி ஸ்க்ரப். இதில் ஆக்ஸிஜனேற்றம் (antioxidants) நிறைந்துள்ளதால், சருமத்தின் அவுட்டர் லேயரில் இருக்கும் டெட் ஸ்கின் செல்களை அகற்றுகிறது. மேலும் இது சர்க்கரையுடன் சேறும் பொழுது சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. எனவே, இது மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அளிக்கிறது. 

தயாரிக்கும் முறை:

  • முதலில் ½ கப் அரைத்த காபி மற்றும் ½ கப் சர்க்கரை சேர்க்கவும்.
  • பின்பு 2-3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை அல்லது விர்ஜின் ஆலிவ் ஆயிலைச் சேர்க்கவும். இவை அனைத்தையும் கரடுமுரடான பேஸ்ட் கிடைக்கும் வரை நன்கு கலக்கவும்.
  • அந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி 1-2 நிமிடங்கள் மெதுவாக தேய்க்கவும். 
  • பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும். 
  • தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற, வாரத்திற்கு மூன்று முறை இந்த ஸ்க்ரப் பயன்படுத்தவும்.

பாதுகாப்பு குறிப்புகள்:

உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு. எனவே, உங்களுக்கு சென்சிடிவிடி இருந்தால், எந்த ஸ்க்ரப்கள் உங்களுக்கு சரியானவை என்பதை உறுதிப்படுத்த முதலில் உங்கள் தோல் மருத்துவர் அல்லது மருத்துவரிடம் பேச வேண்டும். இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப்கள் உங்கள் முகத்திற்கு அல்ல, உடலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் உங்கள் சருமத்தில் பின்வரும் நிபந்தனைகள் இருந்தால், உரித்தல் தவிர்க்கப்பட வேண்டும்:

  • உடைந்த அல்லது வெட்டப்பட்ட
  • வெயிலில் எரிந்தது
  • வீக்கம் அல்லது சிவப்பு
  • மிகவும் உலர்ந்த  

இவை இருந்தால் மிகவும் கவனமாக செயல்படுங்கள். எனவே, மருத்துவரின் ஆலோசனையை கேட்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

Home remedies for body scrub, homemade exfoliating body scrub, herbal body scrub recipe, how to make exfoliator at home, how to make scrub at home for body, how to make body scrub for glowing skin in tamil, how to make body scrubs at home, how to make body scrub at home easy in tamil, body scrub at home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்