Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பல் கூச்சம் உடனே சரியாக வீட்டு வைத்தியம்.. | Home Remedy for Tooth Sensitivity

Nandhinipriya Ganeshan Updated:
பல் கூச்சம் உடனே சரியாக வீட்டு வைத்தியம்.. | Home Remedy for Tooth SensitivityRepresentative Image.

நமது உடலில் எந்த இடத்தில் வலி வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், இந்த பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சத்தை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியாது. எது சாப்பிட்டாலும் உயிரே போகும் அளவிற்கு வலி இருக்கும். இதில் பல் கூச்சம் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூடான, மிகவும் குளிர்ந்த, இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிடும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் வெறும் தண்ணீர் குடித்தால் கூட பற்களில் கூச்சம் உண்டாகும். இதற்கு காரணம் நமது பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைவது தான். பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். உலகளவில் 70% பேர் இந்த பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த பல் கூச்சத்தை சில வீட்டு வைத்திய முறைகள் மூலமே நாம் சரி செய்ய முடியும். அவை என்ன என்பதை பார்க்கலாம் இப்பதிவில் பார்க்கலாம்.

பல் கூச்சம் நீங்க வீட்டு வைத்தியம்:

➦ பல் கூச்சாத்தால் அவதிப்படுவோர் தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் பல் கூச்சத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட முடியும்.

➦ தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன்பு உங்கள் வாய் பிடிக்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்து, அதை ஈறுகளில் பரவுவது போல நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறுகளில் இருக்கும் தொற்று குணமடைந்து பல் கூச்சம் தடுக்கப்படும்.

➦ கொய்யா இலைகளில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை கிருமிகளை எதிர்த்து போராடுவதோடு, ஈறுகளை பலப்படுத்தவும் உதவுகிறது. தினமும் இரண்டு கொய்யா இலையை எடுத்து அதை நீரில் நன்றாக கழுவிவிட்டு வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர பற்களில் உள்ள மஞ்சள் கரையும் நீங்கும்.

➦ தினமும் பல் துலக்கியதும், வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கரைத்து ஈறுகளில் படுமாறு சில நிமிடங்கள் வைத்து, வாய் கொப்பளித்தால் வாயில் உள்ள கிருமிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பற்கூச்சத்தையும் தடுக்கும். இதை காலை, மாலை இரண்டு வேலைகளிலும் செய்ய வேண்டும்.

➦ கிராம்பு எண்ணெய் கிடைத்தால் அதை வாங்கி, ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் காலை, மாலை இரண்டு முறை செய்ய வேண்டும்.

➦ 1 டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, பல் துலக்கிய பிறகு இதை வாயில் ஊற்றி நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இதை தினமும் செய்துவர பல் கூச்சத்தால் ஏற்படும் வலி விரைவில் நீங்கும்.

➦ எப்பவும் பயன்படுத்தும் டூத் பேஸ்டை விட, புதினா கலந்த டூத் பேஸ்டை பயன்படுத்தினால், ஈறுகள் புத்துணர்ச்சி பெறுவதோடு பல் கூச்சமும் குறையும்.

தவிர்க்க வேண்டியவை:

➦ பல் கூச்சம் இருக்கும் போது சிட்ரஸ் வகை பழங்களை தவிர்க்க வேண்டும். கடினமான டூத் பிரஷ்ஷை தவிர்த்துவிட்டு, மென்மையான டூத் பிரஷ்ஷை பயன்படுத்துங்கள்.

➦ நம்மில் பலரும் பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் பற்களை துலக்குவோம். அது மிகவும் தவறு. ஏனென்றால், அதிக நேரம் பல் துலக்கும்போது பற்களின் எனாமல் குறைந்து பற்களை இழக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே அதிக நேரம் பல் துலக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

➦ ஒரு சிலருக்கு பற்களை கடிப்பது, கொரிப்பது போன்ற பழக்கம் இருக்கும். இவ்வாறு செய்வதால் எனாமல் குறைந்து பற்கூச்சம் வரும். எனவே, அவற்றை தவிர்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்