Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Rambutan Fruit Benefits in Tamil

Editorial Desk Updated:
இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Rambutan Fruit Benefits in TamilRepresentative Image.

ரம்புட்டான் பழமானது 'இரம்புட்டான் சப்பின்டேசிக்' என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள பூக்கும் பழத்தாவரம். ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்னும் சொல்லக்கூடிய மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும். ரம்புட் என்ற சொல்லுக்கு முடி என்று பொருள். இதற்கு இந்த பெயர் வந்ததன் காரணம் என்னவென்று பார்த்தால் இந்த பழத்தின் மேல் பகுதியானது முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த ரம்புட்டான் பழம் கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய இடங்களில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

ரம்புட்டான் பழம் இயல்பாக குளுமையான ஒரு வகை பழம். இந்த பழத்தை மூன்று பாகமாக பிரிக்கலாம். இந்த பழத்தை மேல்தோல் பகுதி, சதை  பகுதி மற்றும் விதை பகுதி. இதன் தோல் பகுதியும், விதை பகுதியும் மிக கசப்பாக இருக்கும்; சதை பகுதி மட்டுமே சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். இந்த பழத்தில் கலோரி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, நியாசின், ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைடரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. 

நன்மைகள்:

இந்த பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேரவிடாமல் தடுக்கப்படுகிறது. இதனால், மாரடைப்பு அபாயம் குறையும். இந்த பழமானது ஆஸ்துமா மற்றும் நீரிழிவு முதலிய நோய்களை கட்டுப்படுத்துவதோடு கண் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இப்பழத்தில் உள்ள இரும்புசத்து உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்ற கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது. 

இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். மேலும், இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரெட், புரதம் போன்ற சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. இதன் தோல் பகுதியானது சீதபேதியைக் (Dysentry) குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நாக்கு வறண்டு போவதை தடுக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்