How to take care of Aari Work Clothes: தற்போது பெண்கள் அதிகம் உடுத்த விரும்பும் துணிகளில், ஆரி வேலைபாடுகள் செய்த துணிகளை உடுத்த விரும்புகின்றனர். அதை பராமரிக்கும் முறை பற்றிய தகவல் இந்த பதிவில் உள்ளது தொடர்ந்து படியுங்கள்.
பொதுவாகவே ஆண்களை விட பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் மற்றும் அலங்காரங்கள் மீது தனி பிரியம் உண்டு. ஏனெனில் பெண்களின் ஆடையில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அந்த வகையில் பெண்கள் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு பிரம்மாண்ட உடை அணிய விரும்புவார்கள். அதிலும் ஆரி வேலைப்பாடுகள் நிறைய உடைகளை உடுத்துவது தற்போது ட்ரெண்டிங் ஆக மாறி விட்டது.
ஆரி வொர்க் என்றால் என்ன?
எம்பிராய்டரி என்பது துணி அல்லது fabric இன் தோற்றத்தை மேம்படுத்த, நூல் கைவினைப்பொருளைக் (thread craft) குறிக்கிறது. எம்பிராய்டரி டிசைன்ஸ் துணியின் அமைப்பின் அடிப்படையில் உருவாகின்றன. நூல்களைத் தவிர முத்துக்கள், மணிகள், கற்கள் மற்றும் சீக்வின்கள் போன்ற மற்ற அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தியும் துணிகளை அலங்கரிக்கலாம். அந்த வகையில் இந்தியா தனித்துவமான அழகான எம்பிராய்டரி நுட்பங்களுக்கு பெயர் பெற்றது.
மேலும் எம்பிராய்டரியின் பல வடிவங்களில் முகலாய காலத்தில் உருவானது இந்த ஆரி எம்பிராய்டரி. இது பெரும்பாலும் அகமதாபாத்தில் நடைமுறையில் உள்ளது. மேலும் நேர்த்தியான மற்றும் நுட்பமான நூல் வேலைக்காக பிரபலமானதால் கை எம்பிராய்டரியின் தரத்தை மேம்படுத்துகிறது.
அதை பராமரிப்பது எப்படி?
இதனை வேலைப்பாடுகளைக் கொண்ட ஆரி துணிகள் சாதராண துணிகளைப்போல் அடிக்கடி துவைக்கவோ அலசவோ முடியாது. அதை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும்.
முதலில் நினைவில் வைத்துக்கொள்வது ஆரி வேலைப்பாடுகள் நிறைந்த துணிகளை துவைக்கக் கூடாது. நீங்கள் அந்த துணியை உடுத்திய பிறகு, சிறிது நேரம் நிழலில் நன்றாக உலர்த்திய பின்னர் எடுத்து மடித்து வைத்துக்கவும்.
பெரும்பாலும் இந்த ஆரி டிசைன் இருக்கும் துணிகளை உடுத்துவதில் இருக்கும் ஒரே சிரமம் வியர்வை தான். அக்குள் வியர்வை ஏற்படலாம், அதனால் அந்த இடத்தில் துணியின் நிறம் சற்று fade ஆகலாம். எனவே, அக்குளில் வியர்வையை குறைக்க அண்டர் ஆர்ம்ஸ் பேட் பயன்படுத்துங்கள்.