Mon ,May 27, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் சரியான முறை இதுதான்...

Nandhinipriya Ganeshan August 01, 2022 & 12:30 [IST]
குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் சரியான முறை இதுதான்... Representative Image.

How to Breastfeed Newborn Baby: தாய்ப்பால் கொடுப்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆரம்பத்தில் கடினமாக தான் இருக்கும். முதன் முதலில் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் எந்த ஒரு தாய்க்கும் அவர்களின் பிறந்த குழந்தையைப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்வதற்கு சிறிது காலம் எடுக்கும். ஏனெனில், அது ஒரு புதுவிதமான அனுபவம். கஷ்டத்திலும் கிடைக்கும் ஒரு அழகான ஆனந்தம் அந்த காலம். மற்ற அம்மாக்கள் தங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதைப் பார்க்கும்போது 'ஓ, அது சுலபமாகத் தான் இருக்கும்போல!' என்று நீங்க நினைக்கலாம். ஆனால், உண்மையை சொல்லப்போனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 

தாய்ப்பால் எனும் வரப்பிரசாதம்… மருத்துவ ரீதியாக தாய்ப்பாலின் மகத்துவம்…

இது எல்லா அம்மாக்களுக்கும் இயல்பாக வருவது கிடையாது. மேலும் அம்மா மற்றும் குழந்தை இருவரும் செயல்முறைக்கு வசதியாக இருக்க தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தையை எப்படி பிடிப்பது, குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வது, உங்கள் குழந்தைக்கு எவ்வளவு பால் ஊட்டுவது, என்று பல கேள்விகள் இருக்கும். ஆனால், சில காலம் போக போக நீங்களே அனைத்தையும் அறிந்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும். அதன் பிறகு இதுவும் சுலபம் தான். பொதுவாக, தாய்ப்பாலூட்டுவது தாய்க்கும் குழந்தைக்கும் நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இப்போது மேலே கூறிய அனைத்து கேள்விகளுக்கும் உண்டான பதில்களை விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு தாய்மார்களும் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் குழந்தையை எப்படிப் பிடித்துக் கொள்வது?

தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வசதியான நிலையில் குழந்தையைப் பிடித்துக் கொள்ளுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் வசதியாக இருக்க உதவும் சில (how to breastfeed your newborn baby) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

தொட்டில் பிடி | Cradle Hold

உங்கள் குழந்தையை ஒரு கையின் முழங்கையால் தலையைத் தாங்கி, மறு கையால் அடிவயிற்றில் படுக்கச் செய்யுங்கள். உங்கள் குழந்தை மார்பகத்தை பார்த்தவாறு இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு தலை நிக்கும் வரை அவரது தலையை பிடித்து கொள்ள வேண்டும். இந்த நிலை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பொதுவான ஒன்றாகும்.

கிராஸ்ஓவர் பிடி | Crossover Hold

இதுவும் தொட்டில் பிடியைப் போன்றது தான், ஆனால் ஒரே வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் பாலூட்டும் மார்பகத்திற்கு எதிரே உங்கள் குழந்தையின் தலையைப் பிடிக்க வேண்டும். குழந்தையின் உடல் உங்களை நோக்கி இருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் வலது மார்பகத்திற்கு பாலூட்டுகிறீர்கள் என்றால், அவரது தலையை உங்கள் இடது கையால் பிடித்துக் கொள்ளுங்கள்.

ஃபுட்பால் ஹோல்ட் | Football Hold

இந்த நிலையில் நீங்கள் பாலூட்டும் மார்பகத்தின் பக்கத்தில் உங்கள் குழந்தையை படுக்க வைத்து அடியில் உங்களுடைய கையால் தாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது உங்கள் குழந்தையை தலையணையின் மீது படுக்க வைத்து அடியில் கையை போட்டு தூக்கிப்பிடித்து மற்றொரு கையால் மார்பகத்தை பிடித்துக் கொள்ள வேண்டும். 

சைட் லையிங் பொசிஷன் | Side Lying Position

உங்களுடைய தலைக்கு கீழ் ஒரு தலையனையை வைத்து, ஒருபுறமாக படுத்துக் கொள்ளுங்கள். பின்னர், உங்கள் குழந்தையையும் உங்களை நோக்கி ஒருபுறமாக படுக்க வைக்கவும். உங்கள் குழந்தையின் முதுகுக்குப் பின்னா ல் ஒரு சிறிய தலையணையை வைத்து ஒட்டு குடுக்கவேண்டும். இரவில் சாப்பிட்ட பிறகு பாலூட்ட இது ஒரு நல்ல தோரணையாகும். இருப்பினும், சில மருத்துவர்களால் இந்த நிலை பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனெனில் இது குழந்தைகளுக்கு ஆபத்தானது மற்றும் காது தொற்று அபாயத்தை உருவாக்குகிறது. 

குழந்தையை உங்கள் மார்போடு சரியாக இணைப்பது எப்படி?

பாலூட்டும் தாய்மார்களுக்கு முறையான பிடிப்பு மிகவும் அவசியம். உங்கள் குழந்தையை சரியான நிலைக்கு கொண்டு வரும் வரை முயற்சி செய்யுங்கள். தவறான பிடிப்பு மார்பகத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும், முலைக்காம்புகளை உறிஞ்சுவது பால் சுரப்பிகளை சுருக்காது, அதுமட்டுமல்லாமல் குழந்தைக்கு குறைந்த பால் தான் கிடைக்கும். இது அவர்களுடைய பசியை போக்காது, மீண்டும் பசியை தூண்டும். 

அதோடு, இப்படி குழந்தை பால் குடிக்கும் போது முலைக்காம்பில் விரிசல் ஏற்படவும், புண்ணாவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த சிக்கல்களைத் தவிர்க்க, உங்கள் குழந்தையின் வாய் முலைக்காம்பு மற்றும் அரோலா இரண்டையும் உள்ளடக்கியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது பால் சுரப்பிகளில் இருந்து பாலை வெளியேற்ற உதவும். இதன் மூலம் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கும். 

எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

தாய்ப்பால் கொடுப்பதில் மட்டும் நேர வரம்புகளை அமைக்க வேண்டாம், உங்கள் குழந்தை எவ்வளவு நேரம் பால் குடிக்க நினைக்கிறதோ குடிக்கட்டும் தடுக்காதீர்கள். பொதுவாக, ஒரு ஊட்டலுக்கான சரியான நேரம் 20 முதல் 30 நிமிடங்கள் வரை எடுக்கும். ஆனால், இது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். உங்களுடைய ஒரு பக்க மார்பகம் முழுவதும் வடியும் வரை உங்கள் குழந்தைக்கு பாலூட்டுங்கள். அதாவது, ஒவ்வொரு ஊட்டலுக்கும் குறைந்தது ஒரு பக்கமாவது வடிந்திருக்க வேண்டும். ஏனெனில், இரண்டு மார்பகங்களிலும் உணவளிப்பதை விட இப்படி ஒரு மார்பகத்தில் பாலூட்டும் போது கடைசியாக முதிர்ந்த பாலில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகம் நிறைந்திருக்கும். இதனால், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மேம்படும். 

உங்கள் குழந்தை பால் குடிப்பதை நிறுத்தும் வரை முலைக்காம்பை வெளியே இழுக்க வேண்டாம். அப்படி எடுத்து மறுபுறம் கொடுக்கலாம் ஆனால், குழந்தையை குடிக்க கட்டாயப்படுத்த கூடாது. ஒருவேளை குழந்தை பால் குடிக்க மறுத்தால் அவர்களுக்கு வயிறு நிறைந்து விட்டது என்று அர்த்தம். அடுத்த முறை பாலூட்டும் போது மற்றொரு மார்பகத்தில் தொடங்குகள். 

குழந்தை பசியடங்கி முலைக்காம்பை விடும் வரை காத்திருங்கள். ஒருவேளை குழந்தை அவ்வாறு செய்யவில்லை என்றால், உறிஞ்சும் மற்றும் விழுங்கும் முறை மெதுவாக இருக்கும்போது நீங்கள் பாலூட்டலை முடித்துக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை ஊட்டலுக்கு நடுவில் அல்லது முதல் மார்பகத்தின் முடிவில் தூங்கிவிடும். அப்படி தூங்கும்போது மெதுவாக முலைக்காம்பை வெளியே எடுத்து விடுங்கள். 

தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்

இதற்கிடையில், உங்கள் குழந்தைக்கு இரண்டு மார்பகங்களிலும் உணவளிக்க மறந்து விடாதீர்கள். ஏனெனில் ஒரு பக்கம் மட்டும் உணவளிப்பதால் மார்பு வலி மற்றும் மார்பக தொற்றுக்கு வழிவகுக்கும். 

எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? 

இத்தன முறை என்றில்லாமல் பசி இருக்கும்போது எப்போதும் உணவளிக்க முயற்சி செய்யுங்கள். ஆனால், முதல் 2 நாட்களில் நீங்களே தான் பாலூட்ட வேண்டும். ஏனெனில், பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு மூன்றாவது நாளில் தான் பசி அதிகமாக எடுக்கும். ஒருவேளை, குழந்தை பால் குடிக்க மறுத்தால், சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு அதிகமாகும். 

புதிதாகப் பிறந்த குழந்தை முதல் சில வாரங்களுக்கு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் பால் குடிக்க வேண்டும். குழந்தை பசிக்கு அழவில்லை என்றாலும், சராசரியாக, ஒவ்வொரு 2 முதல் 3 மணி நேரத்திற்கும் உங்கள் குழந்தைக்கு நீங்க உணவளிக்க வேண்டியது (how to breastfeed properly) அவசியம். 

குழந்தைகளின் பசி அறிகுறிகள்:

உங்கள் குழந்தை பசியுடன் இருக்கும்போது தாய்ப்பால் கொடுங்கள். இருப்பினும், குழந்தை அழும் வரை காத்திருக்கவும் வேண்டாம். ஏனெனில் குழந்தை மிகுந்த பசியுடன் இருக்கும். எனவே, குழந்தைக்கு பாலூட்ட சரியான நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். குழந்தைகள் பின்வரும் அறிகுறிகளைக் காட்டுவதன் மூலம் அவர்களின் பசியை நமக்குத் தெரிவிக்கும்.

  • உங்களுடைய மார்பகங்களுக்கு அருகில் கொண்டு செல்லுங்கள்.
  • குழந்தையின் சிறிய கை அல்லது உதடுகளை உறிஞ்சும்.
  • வாயை திறக்கும்
  • நாக்கை வெளியே நீட்டுவது
  • தூக்கத்தில் திடீரென எழுந்துக் கொள்வது
  • காரணமில்லாமல் தீடீரென்று அழுவது
  • ஏதாவது சத்தம் எழுப்புவது
  • உதடுகளை சப்புவது

இவை எல்லாம் குழந்தை பசியுடன் இருக்கிறது என்று அர்த்தமாகும். 

Tags: 

How to Breastfeed Newborn Baby | How to breastfeed properly | How to breastfeed your newborn baby | Breastfeed tips in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்