Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 73,811.76
-527.68sensex(-0.71%)
நிஃப்டி22,438.30
-132.05sensex(-0.59%)
USD
81.57
Exclusive

Nayanthara Wedding Jewellery: நயன்தாரா திருமணத்தில் தாலி மட்டும் தான் தங்கம்.... வாய்பிளக்க வைக்கும் நகைகளின் மதிப்பு....!!!

Nandhinipriya Ganeshan June 11, 2022 & 12:00 [IST]
Nayanthara Wedding Jewellery: நயன்தாரா திருமணத்தில் தாலி மட்டும் தான் தங்கம்.... வாய்பிளக்க வைக்கும் நகைகளின் மதிப்பு....!!!Representative Image.

Nayanthara Wedding Jewellery: சுமார் 7 ஆண்டு காலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்  இவர்களின் திருமணம் வெகு சிறப்பாக நேற்று நடந்தது. இதில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர். 

திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த பிரத்யேக நகை மற்றும் புடவை பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்போதெல்லாம் பெண்கள் கான்ட்ராஸ்ட் பிளவுஸ், புடவை, நகைகள் அணிவது ட்ரெண்டாகி விட்ட நிலையில், நயன்தாரா அடர் சிவப்பு நிறப் புடவைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில், வைடூரிய நகைகளை அணிந்திருந்தார்.

மூன்று வகையான அணிகலன்களை அவர் கழுத்தில் அணிந்திருந்தார்.  அதில் கழுத்தை ஒட்டி அணிந்திருந்த சோக்கர் போல்கி மற்றும் வைடூரிய கற்களால் ஆனது. இரண்டாவதாக மரகத கற்களால் ஆன ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். இத்துடன் ஏழு அடுக்குகள் கொண்ட  ஆரம் அணிந்திருந்தார். ஆரம் முழுவதும் ரோஸ் கட்ஸ், வைரம், போல்கி, மரகதக் கற்களால் ஆனது.

மேலும், அவர் அணிந்திருந்த கம்மலில் காப்சோன் என்ற கல் வகையைச் சுற்றி வைடூரிய கற்கள், வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.  அதேபோல், நயன் அணிந்திருந்த வளையலும் மரகதக் கற்களால் ஆனது. இந்த அணிகலன்களை Goenka என்ற நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக அவர் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு இந்திய மதிப்பின் படி இரண்டரையிலிருந்து மூன்று கோடியாக (Nayanthara Wedding Jewellery Cost) வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதை விக்னேஷ் சிவன் தான் தன் காதல் மனைவிக்காக பரிசாக அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, விக்னேஷ் சிவன் திருமண மோதிரமாக 5 கோடி மதிப்புள்ள வரை மோதிரத்தையும் பரிசளித்துள்ளாராம். பின்ன 7 வருச காதல்னா சும்மாவா?


Nayanthara Wedding Saree: நயன்தாரா திருமணத்தில் அணிந்திருந்த புடவையில் இத்தனை அம்சங்களா....??


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்