Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: இந்த வாரத்திற்கான ஆப்டிக்கல் இல்யூஷன் கேம்…. இதில் 13 முகங்கள் ஒளிஞ்சிறுக்கு முடிஞ்சா கண்டுபிடிங்க…

Nandhinipriya Ganeshan May 13, 2022 & 13:10 [IST]
Optical Illusion Game: இந்த வாரத்திற்கான ஆப்டிக்கல் இல்யூஷன் கேம்…. இதில் 13 முகங்கள் ஒளிஞ்சிறுக்கு முடிஞ்சா கண்டுபிடிங்க…Representative Image.

Optical Illusion Game: சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருவது தான் ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள். பொழுதுபோக்கு அம்சமாகவும், சிந்தனைத் திறனை தூண்டும் விதமாகவும் அமைகின்ற இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள். இப்படங்களைக் கொண்டு உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிய முடியும் என்றும் கூறுகின்றனர். அதாவது, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்கு தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேற மாதிரியாகவும் தோன்றும். இதை வைத்து உண்களுடைய குணாதிசயத்தை கண்டுபிடித்துவிடலாமாம்.

தி ஃபாரஸ்ட் ஹாஸ் ஐஸ் இமேஜ்:

ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்களில் பல வகை உண்டு. அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெவ் டூலிட்டில் உருவாக்கிய ‘The Forest Has Eyes’ ஓவியம். இந்த ஓவியத்தில் பல முகங்கள் மறைந்துள்ளன. முதலில் இந்த படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். அதில் சில முகங்களை பார்த்ததுமே கண்டுபிடித்து விடலாம். ஆனால், மேலும் பல முகங்களை கண்டுபிடிக்க மூளையை கசக்கி பிழிய வேண்டியிருக்கும்.

படத்தை பார்க்கும் போது அடர்ந்த காட்டில் ஒரு அழகிய நீரோடை பகுதியில், இரண்டு குதிரைகளுடன் வீரர்கள் சவாரி செய்வது போலவும், அதற்கு கீழே பார்த்தால் பாறைகளில் ஐந்து முகங்களை கண்டுபிடித்து விடலாம். ஆனால், அந்த ஓவியத்தில் மொத்தம் 13 முகங்கள் மறைந்திருக்கின்றன. உங்களால் அவற்றை எல்லாம் கண்டிப்பிடித்து விட்டீர்களா? இல்லையென்றால், நாங்கள் அதற்கான விடைகளை கீழே அந்த படத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளோம்.

ஆனால், எடுத்த உடனே வந்த பதிலை பார்க்காமல் நீங்களே கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்க. இது உண்மையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை உங்களுக்கு தரும்.

ஒரு சேர்:

இதுவும் ஒரு கேம் மாதிரிதான். நீங்க விடைகளை கண்டுபிடித்து விட்டால், உங்களுடைய நண்பர்களுக்கும் அதை சேர் செய்து கண்டுபிடிக்க சொல்லுங்க. இந்த மாதிரியான சுவாரஸ்யமான விளையாட்டுகளை விளையாட எங்கள் பக்கத்தை தொடர்ந்திருங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்