Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான ரசகுல்லா எப்படிச் செய்வது ?

Vaishnavi Subramani Updated:
இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான ரசகுல்லா எப்படிச் செய்வது ?Representative Image.

தினமும் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி வரிசையில், இன்றைய ஸ்நாக்ஸ் ரெசிபி என்பது ஒரு இனிப்பான மற்றும் மதியம் குறைவாகச் சாப்பிட்டால் அல்லது சாப்பிடாமல் இருந்தால் இந்த ரெசிபி சாப்பிடும் போது ஒரு முழு சாப்பாடு சாப்பிட்டது போல் இருக்கும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான ரசகுல்லா எப்படிச் செய்வது ?Representative Image

✤ இது பழைய சாதத்தை வைத்துச் செய்வதால் அதில் பல வகையான சத்துகள் உள்ளது. அது நம் உடலில் உள்ள பிரச்சனைகள் சரிசெய்வதற்கும் இந்த வெயில் காலத்தில் குளுகுளு என ஒரு ஸ்வீட் ரெசிபி. இந்த பதிவில் இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான ரசகுல்லா எப்படிச் செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான ரசகுல்லா எப்படிச் செய்வது ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ மைதா மாவு – 1ஸ்பூன்

✤ சோளமாவு – 1/2ஸ்பூன்

✤ பழைய சாதம் – 1கப்

✤ சர்க்கரை – 1கப்

✤ தண்ணீர் – 2கப்

✤ குங்குமப்பூ – 2

✤ ஏலக்காய் – 1/4ஸ்பூன்

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான ரசகுல்லா எப்படிச் செய்வது ?Representative Image

செய்முறை

✤ முதலில் ஒரு கப் அளவிற்குப் பழைய சாதம் எடுத்து அதில் ஊறவைத்த தண்ணீரை முழுவதுமாக வடிய நன்றாகப் பிழிந்து தண்ணீரில் இல்லாமல் மிக்ஸி, ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

✤ அரைத்த அந்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மைதா மாவு சேர்க்கவும்.

✤ அத்துடன் அரை கப் அளவிற்கு சோள மாவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். அதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான ரசகுல்லா எப்படிச் செய்வது ?Representative Image

✤ மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்குச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அதில் இரண்டு கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

✤ அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். ஏலக்காய் தட்டி பொடிப்பொடியாக அதில் கால் டிஸ்பூன் அளவிற்குச் சேர்க்க வேண்டும்.

✤ அந்த சர்க்கரை நன்றாகக் கரைந்து பாவு பதத்திற்கு வர ஆரம்பித்தால் அதில் உருட்டிய உருண்டைகளைச் சேர்க்கவும்.

இன்றைய மாலையில் ஒரு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி இனிப்பான ரசகுல்லா எப்படிச் செய்வது ?Representative Image

✤ உருண்டைகளைச் சேர்த்த பிறகு, அந்த பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி ஒரு 10 நிமிடங்கள் அடுப்பைச் சிறிய தீயில் வைத்து வேக விடவும்.

✤ 10 நிமிடங்களுக்குப் பின், அந்த மூடியை எடுத்துப் பார்த்தால் சிறியதாகச் சேர்த்த உருண்டைகள் வெந்து பெரியதாக மாறி விடும்.

✤ இதை அப்படியே எடுத்துப் பரிமாறாமல் சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து அதற்குப் பிறகு பரிமாறலாம். குளுகுளு என மாலையில் ஸ்நாக்ஸ் ஆக ஒரு ரசகுல்லா தயார். இது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ரெசிபி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்