Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Test: சின்னதா ஒரு விளையாட்டு... முடிஞ்ச இந்த ஓவியத்தில் மறைந்துள்ள 9 முகங்களை கண்டுபிடிங்க...!

Nandhinipriya Ganeshan May 07, 2022 & 13:15 [IST]
Optical Illusion Test: சின்னதா ஒரு விளையாட்டு... முடிஞ்ச இந்த ஓவியத்தில் மறைந்துள்ள 9 முகங்களை கண்டுபிடிங்க...!Representative Image.

Optical Illusion Test: சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருவது தான் ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள். பொழுதுபோக்கு அம்சமாகவும், சிந்தனைத் திறனை தூண்டும் விதமாகவும் அமைகின்ற இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள். இப்படங்களைக் கொண்டு உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிய முடியும் என்றும் கூறுகின்றனர். அதாவது, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்கு தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேற மாதிரியாகவும் தோன்றும். இதை வைத்து உண்களுடைய குணாதிசயத்தை கண்டுபிடித்துவிடலாமாம்.

ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்களில் பல வகை உண்டு. அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதலில் இந்த செய்தியில் உள்ள படத்தைப் பாருங்கள். உங்கள் கண்களுக்கு அதிலிருக்கும்  9 முகங்கள் தெரிகிறதா? இது தான் அந்த சவால்...

ஜெனரல் ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்:

மிகவும் பிரபலமான ஆப்டிக்கல் இல்யூஷன்களுள் ஒன்று, ஜெனரல் குடும்பத்தை குறிக்கும் இந்த ஓவியம் (General Optical Illusion). இந்த ஓவியத்தை ஆக்டேவியோ ஒகாம்போவா உருவாக்கியுள்ளார். தற்போது, இந்த ஓவியத்தில் 9 முகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சில முகங்களை எளிதில் கண்டுபிடித்தாலும், ஒரு சிலவற்றை கண்டுபிடிக்க நீங்க உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஓவியத்தில் இருக்கும் மிகப்பெரிய படம் ஜெனரல் முகத்தை (1) குறிக்கிறது.

அடுத்ததாக, அவருடைய கண்களை பார்த்தால், அதில் தொப்பி போட்ட ஒரு முதியவரை (2) காண முடிகிறது.

ஜெனரலின் காதுப்பகுதியை பார்த்தால், ஒரு பெண் (4) கைக்குழந்தையுடன் (3) நிற்ப்பது போன்ற மாயத்தோற்றத்தை காண முடியும். 

ஜெனரலின் வலதுபுறத்தில் உள்ள மதில் சுவரில் ஒரு பெண்ணின் (5) முகம் தென்படுகிறது. இது அவருடைய மனைவியாக கூட இருக்கலாம்.

மதில் சுவரின் மறுபுறத்தில் ஒரு காகம் ஒரு கல் திட்டத்தின் மீது அமர்ந்திருப்பது போல் தோன்றும். அதன் பின்னால், நீங்க நான்கு முகங்களை (6,7,8,9) காணலாம்.

ஒரு சேர்:

உங்கள் கண்களுக்கு ஒன்பது முகங்களும் தெரிந்தது என்றால் நீங்கள் தனித்தன்மை வாய்ந்த நபர் என்று அர்த்தம். இதை உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்து சேலஞ்ச் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்