Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,827.16
-315.64sensex(-0.43%)
நிஃப்டி22,129.00
-83.70sensex(-0.38%)
USD
81.57
Exclusive

உயிரை பறிக்கும் கடுகு.. ஜாக்கிரதையா இருங்க மக்களே..!!

Nandhinipriya Ganeshan July 02, 2022 & 09:15 [IST]
உயிரை பறிக்கும் கடுகு.. ஜாக்கிரதையா இருங்க மக்களே..!!Representative Image.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒரு உணவுப்பொருள் என்றால் அது கடுகு தான். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. கடுகில் உடலுக்கு தேவையான எண்ணெய்ச் சத்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதில் உள்ள சில உட்பொருட்கள் உடலில் கேன்சர் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் (kadugu health benefits in tamil) கொண்டது. இதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். 

உயிரை பறிக்கும் கடுகு: இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த கடுகின் விலை என்பது சற்று அதிகமாக தான் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த கடுகில் கலப்படம் செய்யப்படுகிறது. குறிப்பாக இரண்டு பொருட்கள் கலப்படம் (adulterants of mustard) செய்கிறார்கள், ஒன்று கேழ்வரகு மற்றொன்று ஆர்ஜிமோன் விதைகள். கேழ்வரகை ஆரியம் என்றும் அழைப்பதுண்டு. இது பார்ப்பதற்கு கடுகு போலே இருக்கும் ஆனால் அளவில் சற்று பெரியதாக இருப்பதால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இதை சாப்பிடுவதால் எந்த வித பிரச்சனையும் இருக்காது.

ஆர்ஜிமோன் விதைகள்: ஆனால், இந்த கடுகில் கலப்படம் செய்யப்படும் ஆர்ஜிமோன் விதைகள் (பிரம்ம தண்டு விதைகள்) மனித உயிரை பறிக்கும் அளவிற்கு ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட ஒரு பொருள். இந்த விதைகள் பொதுவாக பார்ப்பதற்கு கடுகு போன்றே கருமை நிறத்திலும், சிறிய அளவிலும் இருக்கும். இந்த ஆர்ஜிமோன் விதைகள் அடங்கிய கலப்பட கடுகை தினமும் உணவில் பயன்படுத்தி வந்தால் உடலில் கொடூரமான நோய்களை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு, நாட்கள் செல்லச் செல்ல பார்வை கோளாறு, பக்காவாதம், எரித்தீமா என்ற சரும நோய், தொட்டால் அமுங்கும் அளவிற்கு கால் வீக்கம், இறுதியில் மரணத்தையும் உண்டாக்க கூடியது. 

இதையும் படிங்க: குறட்டை தொல்லையில் இருந்து விடுபட இதோ சில டிப்ஸ்... இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க

ஆர்ஜிமோன் ஆயில்: சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் ஆர்ஜிமோன் ஆயில் விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆயிலை வாங்கிப் பயன்படுத்தியவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மத்திய அரசு ஆர்ஜிமோன் ஆயிலை இந்தியாவில் தடைசெய்தது. நாம் வாங்கும் எண்ணெய் பாக்கெட்டிகளில் ஆர்ஜிமோன் ஆயில் பயன்படுத்தவில்லை (Free From argemone) என்று பதிக்கப்பட்டுப்பதை இப்போதும் காணமுடியும். 

எப்படி கண்டுபிடிப்பது? 

நாம் வாங்கும் கடுகில் ஆர்ஜிமோன் விதைகள் கலந்திருப்பதை எளிதில் கண்டுபிடித்துவிட (how to check argemone seeds adulteration in mustard in tamil) முடியும். பார்ப்பதற்கு கடுகு போல் தோற்றம் கொண்ட இந்த ஆர்ஜிமோன் விதைகள் மேற்பரப்பில் சொரசொரப்பாக காணப்படும். சிறிதளவு கடுகை கையில் எடுத்து நன்றாக உற்றுப் பார்த்தாலே கண்டுபிடித்து விடலாம். (அல்லது) ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். கடையில் வாங்கி வந்த கடுகில் 2-3 ஸ்பூன் அளவு எடுத்து அந்த தண்ணீரில் போட்டால், கடுகு தன்ணீரில் மூழ்கி அடிப்பகுதிக்கு சென்றுவிடும். ஆர்ஜிமோன் விதைகள் மேலேயே மிதக்கும். இத ட்ரை பண்ணி பாருங்க. ஒருவேளை கலப்படம் செய்திருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம்.

இதையும் படிங்க: இந்த பிரச்சனை இருக்குறவங்க தெரியாம கூட மாதுளம் பழத்தை சாப்பிடக்கூடாதாம்.. உஷாரா இருங்க...

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tags:

Kadugu health benefits in tamil | Mustard benefits in tamil | How to check argemone seeds adulteration in mustard in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்