Wed ,Feb 28, 2024

சென்செக்ஸ் 72,292.59
-802.63sensex(-1.10%)
நிஃப்டி21,931.60
-266.75sensex(-1.20%)
USD
81.57
Exclusive

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. தெரிஞ்சுக்கோங்க…

Priyanka Hochumin November 15, 2022 & 12:00 [IST]
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. தெரிஞ்சுக்கோங்க…Representative Image.

Orange Benefits in Tamil: ஆரஞ்சு சிட்ரஸ் பழங்களில் ஒன்று. இது இயற்கை இனிப்பு மற்றும் அதிக அளவு வைட்டமின் சி உள்ளடக்கம் கொண்ட பழமாகும். இந்த பழம் முதலில் சீனாவில் தான் உருவானது, ஆனால் தற்போது உலகளவில் சுமார் 600 வகையான ஆரஞ்சு உள்ளன. உங்களுக்கு மிகவும் பிடித்த ஆரஞ்சை இரண்டு வகையாக பிரிக்கலாம் - இனிப்பு மற்றும் கசப்பு. இருப்பினும் அதிக மக்கள் விரும்புவது இனிப்பான ஆரஞ்சு வகையை தான். 

இனிப்பு ஆரஞ்சு - வலென்சியா (Valencia), தொப்புள் (Navel) மற்றும் ஜாஃபா (Jaffa) ஆரஞ்சுகள் பிரபலமான இனிப்பு ஆரஞ்சு (சிட்ரஸ் சினென்சிஸ்) வகைகளாகும்.

கசப்பு ஆரஞ்சு - ஜாம் (Jam) அல்லது மர்மலேட் (Marmalade) கசப்பான ஆரஞ்சுகளிலிருந்து (சிட்ரஸ் ஆரண்டியம்) தயாரிக்கப்படுகிறது. மேலும் அவற்றின் zest மதுபானங்களில் சுவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 

நாம் சுவைத்த பழங்களில் ஆரஞ்சு பழம் தான் மிகவும் பல்ப் (pulp) மற்றும் ஜூசியாக (Orange Juice Benefits in Tamil) இருக்கிறது. கூடுதலாக, மற்ற பழங்களை விட ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உங்கள் உடலில் ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட அதிகமாக இருக்கிறது. எனவே, உங்கள் உடலுக்கு வைட்டமின் வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது தோலை உரித்து ஆரஞ்சு பழத்தை சாப்பிட வேண்டியது மட்டுமே.

ஆரஞ்சு பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

1. கண் ஆரோக்கியத்திற்கு நல்லது

ஆரஞ்சு கரோட்டினாய்டு அதிகம் இருக்கும் சிறந்த பழமாகும். மேலும் இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ உங்கள் கண்ணின் மியூகஸ் மெம்பிரேனை (eyes mucus membrane) ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதே போல் வயது முதிர்ச்சி காரணமாக உண்டாகும் மாகுலர் சிதைவு (macular degeneration) வராமல் தடுக்க உதவுகிறது. மாகுலர் சிதைவு என்பது குருட்டுத்தன்மையை தூண்டும் ஒரு செயலாகும். நீங்கள் ஆரஞ்சு எடுத்துக்கொள்வதனால், உங்களின் கண்கள் ஒளியை உறிஞ்சுவதற்கு (அதாவது absorb) உதவுகிறது.

2. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

ஆரஞ்சு பழத்தில் அதிகமாக இருக்கும் வைட்டமின் பி6, உங்கள் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் அதில் இருக்கும் மெக்னீசியம், நமது உடலின் நார்மல் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

3. தோல் பாதிப்பைத் தடுக்கிறது

ஆரஞ்சில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இது சருமத்தை வயதான தோற்றத்தை தூண்டும் ஒன்றாகும். வைட்டமின் சி கொலாஜனுக்கு பங்களிப்பதால் சருமத்தை ஆதரிக்கிறது, காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது மற்றும் தோல் வலிமையை மேம்படுத்துகிறது. நீங்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் 50 வயதிலும் இளமையாக (orange benefits for skin in tamil) இருப்பீர்கள். 

4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நமது உடம்பில் ஹெல்த்தி இம்மியூன் சிஸ்டம் (healthy immune system) சரியாக செயல்பட வைட்டமின் சி தேவைப்படுகிறது. அது ஆரஞ்சு பழத்தில் அதிகம் இருக்கிறது. மேலும் இது சளி மற்றும் காது தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

5. உங்கள் உடலை அல்கலைஸ் செய்கிறது

ஆரஞ்சு பழத்தின் அடிப்படை இயல்பு அமிலமானது (அதாவது acidic). இருப்பினும் இது செரிமானத்திற்கு தேவைப்படும் கார தாதுக்களையும் (alkaline minerals) கொண்டுள்ளன. இது கார உணவுகளில் (alkaline food) ஒன்றான எலுமிச்சையின் குணத்தை கொண்டுள்ளது. 

6. கொலஸ்ட்ராலை குறைக்கிறது

உங்களுக்கு தெரியுமா? சிட்ரஸ் பழங்களில் உள்ள பாலிமெதாக்சிலேட்டட் ஃபிளாவோன்கள் (Polymethoxylated Flavones [PMFs]), உங்கள் உடலுக்கு எந்த பின் விளைவுகளும் இல்லாமல், மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விட கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்கும்.

7. புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி புற்றுநோய் உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதை எதிர்த்துப் போராட ஒரு சிறந்த மூலமாகும். இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவசியம் தேவைப்படுகிறது. மேலும் புற்றுநோய்யை எதிர்த்து உயிரை காத்துக்கொள்ள உதவுகிறது. மிரளும் அதில் இருக்கும் டி-லிமோனைன் என்ற கலவை புற்றுநோயைத் தடுக்க (orange fruit benefits in tamil) உதவும்.

8. இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது

ஆரஞ்சுகளில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இதை ஒரு சத்தான சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். இப்பழத்தில் பிரக்டோஸ் உள்ளது, இது இயற்கையான பழ சர்க்கரை ஆகும். இது நீங்கள் சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உயராமல் தடுக்கிறது. ஆரஞ்சின் கிளைசெமிக் குறியீடு (glycemic index) 40, பொதுவாக எந்த உணவில் 50-க்கு கீழ் இருக்கிறதோ அதில் சர்க்கரை குறைவாக இருப்பதாக அர்த்தம். ஆனால் இதை ஒரே நேரத்தில் அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது, ஏனென்றால் அது உடலில் இன்சுலினை அதிகரிக்கும் மற்றும் எடை அதிகரிப்பைத் தூண்டும்.   

9. மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கிறது

இப்பழத்தில் இருக்கும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, உங்கள் குடல் மற்றும் வயிற்றின் செயல்பாடுகளை சீராக வைக்க உதவுகிறது. இது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியைத் (irritable bowel syndrome) தடுக்கிறது. உங்கள் உடலில் தேவையான நார்ச்சத்து இருந்தால் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவும். அது ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதால், இது மலச்சிக்கலை சரி செய்யும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்