Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்பிணி பெண்கள் ஹேர் டை பயன்படுத்தினால் ஆபத்தா? | Can i Use Hair Dye During Pregnancy in Tamil?

Nandhinipriya Ganeshan November 14, 2022 & 20:00 [IST]
கர்ப்பிணி பெண்கள் ஹேர் டை பயன்படுத்தினால் ஆபத்தா? | Can i Use Hair Dye During Pregnancy in Tamil?Representative Image.

பொதுவாக ஒரு வயதை கடந்துவிட்டால் அனைவருக்கும் நரைமுடி வருவது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனாலும், இந்த காலத்தில் ஏற்படும் டென்ஷன், மனஅழுத்தம், உணவு முறை ஆகியவற்றால் வெகு விரைவாக பலக்கும் நரைமுடி வந்துவிடுகிறது. அதனால், அனைவரும் ஹேர் டையை தேடுகிறோம். ஹேர் டையை பொறுத்துவரையில் இயற்கை முறையில் தயாரித்ததாக இருப்பின் கூடுதல் தலைமுடி பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

கர்ப்பிணி பெண்கள் ஹேர் டை பயன்படுத்தினால் ஆபத்தா? | Can i Use Hair Dye During Pregnancy in Tamil?Representative Image

இருப்பினும், கர்ப்பிணி பெண்கள் ஹேர் டை பயன்படுத்தலாமா? அது நல்லதா? என்று பல பெண்களுக்கும் சந்தேகம் இருக்கும். அதற்கான பதிலை தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக, கர்ப்பக் காலத்தில் ஒருவர் உபயோகிக்கும் டையில் சேர்க்கப்படுகிற கெமிக்கல்களின் அளவு குறைவுதான். அந்த கெமிக்கள் கர்ப்பிணிகளின் இரத்தத்தில் கலந்து, அதன் மூலம் கருவிலுள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இது தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கும் பொருந்தும். 

மேலும் ஹேர் டை உபயோகிக்கும்போது உங்க மண்டைப்பகுதியில் காயமோ, புண்களோ இருந்து அதன் மீது டை படும்போது அதன் வழியே கெமிக்கல்கள் ஊடுருவி, இரத்தத்தில் கலப்பது அதிகமாக இருக்கும். அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். எனவே, சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்ப்பிணி பெண்கள் பின்பற்றிக்கொள்வது நல்லது. 
 

கர்ப்பிணி பெண்கள் ஹேர் டை பயன்படுத்தினால் ஆபத்தா? | Can i Use Hair Dye During Pregnancy in Tamil?Representative Image

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

ஹேர் டை போட்டுக்கொள்ளும் போது கைகளுக்கு கிளவுஸ் அணிந்துக் கொண்டே ஹேர் டை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் டை படாமல் தடுக்கலாம்.

நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோட்டமும் உள்ள அறைகளில் அமர்ந்தபடி ஹேர் டை பயன்படுத்துங்கள். இதன் மூலம் அதிலிருந்து வரும் வாடையை சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

அதேபோல், ஹேர் டையை எப்போதும் மண்டைப்பகுதியில் படாதவாறே பயன்படுத்த வேண்டும். அதாவது முடிகளில் மட்டும் படும்படி கவனமாக பயன்படுத்த வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்