Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேள் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? | Scorpion Bite Treatment in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தேள் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? | Scorpion Bite Treatment in TamilRepresentative Image.

என்னதான் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கோடைக்காலத்தில் பூச்சிகள் வீட்டை சுற்றி வலம் வரும். வண்டுகள், எறும்புகள், சிறு பூச்சிகள் தவிர பூரான், தேள் போன்ற விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வரும். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். சில சமயங்களில் பெரியவர்களையும் கூட. கடித்தது எந்த வகை பூச்சி என்பதை தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே எளிதில் கண்டுபிடித்து விடலாம். 

இருப்பினும், தேள் கடிக்கும் போது தேனி கொட்டியது போன்று தான் இருக்கும். ஆனால், அதைவிட கடுமையான வலியை தரக்கூடியது. இந்த உலகில் 1500 வகையான தேள்கள் இருக்கின்றன. அவற்றில் 30 வகையான தேள்கள் மட்டுமே உயிருக்கு ஆபத்தை தரக்கூடியது. எனவே, எவ்வகை தேளாக இருந்தாலும் கொட்டியதும் உடனடியாக சிகிச்சை கொடுக்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் மருத்துவமனை செல்ல நேரமாகிவிட்டால், முதலில் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். 

தேள் கடிக்கு வீட்டு வைத்தியம்:

எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.

தும்பை இலைகளை எடுத்து அரைத்து நன்றாக மசித்து அதை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் தடவி வந்தால் உடனடியாக வலி குறையும். 

தும்பை இலையை மிளகுடன் சேர்த்து அரைத்து உள்ளுக்கு கொடுத்து வெளியிலும் பூசி வந்தாலும் விஷம் நீங்கும்.

நாட்டு வெல்லத்துடன், கொஞ்சம் சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு புகையிலை சேர்த்து நன்றாக கலந்து பிசைத்து தேள் கடித்த இடத்தில் வைத்து கட்டினால் விஷம் குறையும். 

தேள் கடித்ததும் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும்.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் உடனடி கை வைத்தியத்துக்கு மட்டுமே. எனவே, சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்