Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thakkali Fever Treatment: தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

Nandhinipriya Ganeshan August 24, 2022 & 13:20 [IST]
Thakkali Fever Treatment: தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?Representative Image.

Thakkali Fever Treatment in Babies: கடந்த 3-4 ஆண்டுகளாக கொரோனா என்னும் வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. சீனாவில் தொடங்கிய இந்த உயிர்க்கொல்லி நோய் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவி எத்தனையோ உயிர்கள் பறிப்போயினர். அதுமட்டுமல்லாம், ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியும் ஒருபுறம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. இன்னமும் இதே சூழல் தான் நிலவிவருகிறது. இருப்பினும், எல்லாம் ஓரளவுக்கு குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவரும் வேளையில், ஒமைக்ரான் என்ற மற்றொரு தொற்று பீதியை கிளப்ப தொடங்கியது. 

இதனால், மக்கள் மிகவும் நொந்துப்போயிருந்தனர். இதுபோதாது என்று தற்போது தக்காளி காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், ஆந்த்ராக்ஸ், குரங்கு அம்மை என்று டிசைன் டிசைனாக நோய்த்தொற்று பரவுத்தொடங்கியுள்ளது. அதிலும் குழந்தைகளை தாக்கும் இந்த "தக்காளி காய்ச்சல்" மக்களிடையே பெரும் பீதியை கிளப்பிவருகிறது. காக்சாக்கி ஏ 16 (COXSACKIE A 16 VIRUS) எனும் வைரஸால் உருவாகும் இந்த அரிய வகை நோய், உடல் முழுவதும் சொறி, மற்றும் கொப்புளங்களை உண்டாக்கக்கூடியது. 

Most Read: தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

அந்த கொப்புளங்கள் பார்ப்பதற்கு வடிவத்திலும் நிறத்திலும் தக்காளியை ஒத்திருப்பதால், இந்த காய்ச்சலை தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறதே தவிர, நம் உண்ணும் தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தக்காளி காய்ச்சல் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இந்த நோய்க்கு மருத்துவ உலகத்தில் HFMD HAND FOOT MOUTH DISEASE என்று பெயர். 

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

சுத்தமாகவும் சுகாதாரமாகவும் குழந்தைகளை வைத்திருப்பதன் மூலம் இந்த நோயை தடுக்கலாம்.

கழிவறையை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு சுத்தமாக கழுவ வேண்டும். 

அதோபோல், குழந்தைகளைன் டயப்பர்களை மாற்றியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.

குழந்தைகள் அடிக்கடி விளையாடும் இடத்தையும், பொம்மைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் அவர்களை கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் தனிமைப்படுத்தி வைத்திருப்பது நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்கலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?

வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி பழச்சாறுகள், கஞ்சி, இளநீர் போன்றவற்றை வழங்கலாம்.

தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தோன்றியவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

அதேப்போல், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

Tags:

tomato fever in tamil, thakkali fever symptoms in tamil, tomato fever treatment in babies, tomato fever treatment in tamil, thakkali fever treatment in tamil, tomato fever home remedies, tomato flu treatment at home, tomato flu virus name


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்