Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தைகளைக் குறி வைக்கும் தக்காளிக் காய்ச்சல்…! பெற்றோர்களே உஷார்.. இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…

Gowthami Subramani August 24, 2022 & 12:40 [IST]
குழந்தைகளைக் குறி வைக்கும் தக்காளிக் காய்ச்சல்…! பெற்றோர்களே உஷார்..  இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…Representative Image.

கொரோனா எனும் பேரிடர் நாட்டையே உலுக்கிய நிலையில், தொடர்ந்து அதன் உறுமாறிகளாக பல்வேறு வகையான தொற்று நோய்கள் கண்டறியப்பட்டன. தற்போது தக்காளிக் காய்ச்சல் தொடங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது. இந்தப் பதிவில் நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளிட்டவற்றைப் பற்றி காண்போம்.

தக்காளிக் காய்ச்சல் என்றால் என்ன?

தக்காளி காய்ச்சல் என்பது ஒரு வைரஸால் ஏற்படுவதாகும். இது கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. இருந்தபோதிலும், இது கொரோனா தொடர்புடையது அல்ல எனக் கூறப்படுகிறது. இந்த தக்காளி காய்ச்சல் முதலில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. ஒரு வைரஸ் தொற்றுக்குப் பதில், இந்த காய்ச்சல் குழந்தைகளுக்கு டெங்கு அல்லது சிக்கன்குனியாவின் பின்விளைவாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

காரணங்கள்

டெங்கு மற்றும் சிக்கன்குனியாவைப் போல தக்காளி காய்ச்சல் பரவுவதுக் கண்டறியபட்டுள்ளது. ஆனால், தக்காளி காய்ச்சலை வளர்ப்பதற்கான காரணிகள் அல்லது பரவுவதற்கான காரணங்கள் உள்ளிட்ட எதுவும் கண்டறியப்படவில்லை.

தக்காளி காய்ச்சல் பரவுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்து சுகாதார அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தக்காளிக் காய்ச்சலின் அறிகுறிகள்

தக்காளிக் காய்ச்சலின் அறிகுறிகள் குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

தோல் எரிச்சல்

தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தோன்றும் ஒரு பொதுவான அறிகுறியாக தோல் எரிச்சல் உள்ளது.

நிறமாற்றம்

கைகள் மற்றும் கால்களின் நிறம் மாறும். அதிலும், சற்று அடையாளம் காண முடியாத அளவிற்கு நிறமாற்றம் உண்டாகும்.

மூட்டு வலி மற்றும் உடல் வலி

உடல் மற்றும் மூட்டு வலி காரணமாக, தக்காளி வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் சீராக மெல்ல பாதிக்கப்பட்டு சிரமப்படுவர்.

இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கிலிருந்து தொடர்ந்து நீர் வழிதல் உள்ளிட்டவை கொரோனா வைரஸின் தொற்றாக இருப்பினும், தக்காளி காய்ச்சலுக்கும் இந்த அறிகுறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், இதன் பொதுவான அறிகுறிகளாக வரும் வயிற்றுப் பிடிப்பு, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி உள்ளிட்டவை இருக்கும் எனும் போதிலும், இவை நம் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதிக்கும்.

Most Read: தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tomato Flu Causes and Symptoms | Tomato Flu Causes and Symptoms in Tamil | Tomato Flu Causes and Symptoms Tamil Meaning | Tomato Flu Causes and Symptoms Tamil video | Can we eat Tomato During fever | Can Food Allergy Cause Flu Like Symptoms | Can Food intolerance Cause Flu-Like Symptoms | Can Food Cause Flu Like Symptoms | What Causes Tomato Allergy | Tomato Flu Treatment | Tomato Flu Wiki | Tomato Flu in Tamil | Tomato Flu Symptoms in Tamil | Causes of Tomato Flu | Tomato Flu UPSC | Tomato Flu Caused by which Virus | Is Tomato Flu Dangerous | How Tomato Flu Spreads 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்