Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

Krishna Costume Ideas for Babies and Kids: உங்க செல்ல குழந்தைகளுக்கான கிருஷ்ணர் காஸ்ட்யூம் ஐடியாஸ்...!!

Nandhinipriya Ganeshan August 12, 2023 & 17:15 [IST]
Krishna Costume Ideas for Babies and Kids: உங்க செல்ல குழந்தைகளுக்கான கிருஷ்ணர் காஸ்ட்யூம் ஐடியாஸ்...!!Representative Image.

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில் நடு இரவில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். இந்த புனித நாள் தான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி 2023 'Krishna Jayanthi 2023' இந்த ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணரை புஷ்பங்களால் அலங்கரித்து, அவருக்கு பிடித்த வெண்ணெய் உள்ளிட்ட பலகாரங்களை செய்து வழிபாடு செய்வார்கள். அதுமட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் குட்டி குழந்தைகளுக்கும் கிருஷ்ணர் வேடம் அணிந்து வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்தவகையில், உங்க குழந்தைக்கான கிருஷ்ணர் காஸ்ட்யூம் ஐடியா பற்றி பார்க்கலாம். 

வேஷ்ட்டி:

உங்க குழந்தைக்கு பட்டால் ஆன வேஷ்ட்டி உடுத்துவிடுங்கள். அதுவும் மஞ்சள் நிறமாக இருந்தால் அழகாக இருக்கும். பெரியவர்களுக்கே வேஷ்ட்டி  இடுப்பில் நிற்காது, குழந்தைகளுக்கு எப்படி நிற்கும். எனவே, எலாஸ்டிக் வைத்த வேஷ்ட்டியை சேர்ந்தெடுப்பது சிறந்தது. அந்த வேஷ்ட்டியின் நிறத்திற்கு எடுப்பாக குர்தா அல்லது ஸ்டோலை உடுத்தலாம். அதுவும் இளஞ்சிவப்பு அல்லது கரு நீல நிறமாக சூப்பர். எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகள் ஓடி விளையாவார்கள் அதற்கு வசதியாக இருக்கும்படி உடுத்திவிட வேண்டும்.

மயில் இறகு & கிரீடம்:

கிருஷ்ணர் வேடத்திற்கு முக்கியமே மயில் இறகும், கிரீடமும் தான். அதை மட்டும் மறந்துவிடக் கூடாது. கடையில் கிரீடம் கிடைக்கும் அல்லது வீட்டிலேயே கிரீடம் செய்து அணிவிக்கலாம். ஆனால், கிரீடம் குழந்தைக்கு வசதியாக இருக்க வேண்டும். ரொம்ப பெரியதாக இருக்கக்கூடாது. அது  அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். 

புல்லாங்குழல்:

புல்லாங்குழல் இல்லாமல் கிருஷ்ணரின் தோற்றம் முழுமையடையாது. எனவே, பொம்மை புல்லாங்குழலோ அல்லது உண்மையான புல்லாங்குழலோ வாங்கி கொடுக்கலாம். ஆனால், உங்க குழந்தையின் அளவிற்கு ஏற்ப நீளம் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

Also Read: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 'நெய் பணியாரம்' செய்வது எப்படி?

மண் பானை:

வெண்ணெய் திருடனான குழந்தை கிருஷ்னை அழங்கரிக்க ஒரு சிறிய மண் பானையை தயார் செய்துக் கொள்ளுங்கள். அதில் உண்மையான வெண்ணெயை வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதற்கு பதிலாக, வீட்டில் பஞ்சு இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், வெள்ளை நிறத்தில் ஏதாவது ஒரு துணியை பயன்படுத்துக் கொள்ளலாம்.

சக்ரா:

கிருஷ்ணரின் சக்தி வாய்ந்த ஆயுதம் சுதர்சன சக்கரம். நாம் ஒரிஜினல் சக்கரத்தை வாங்க முடியாது. இருப்பினும், அதை எளிதாக செய்யலாம். ஒரு அட்டைப் பெட்டியிலிருந்து வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். பின்பு, உங்க குழந்தையின் ஆள்காட்டி விரலுக்கு ஏற்றவாறு சக்கரத்தின் நடுவில் ஒரு சிறிய துளையை போட்டுக் கொள்ளுங்கள். வட்டத்தின் விளிம்பில் சக்கரம் போல சின்ன சின்னதாக வெட்டிவிட்டு, ஒரு வெள்ளிக் காகிதத்தால் மூடிக் கொள்ளுங்கள். இப்போது சக்கரம் ரெடி.

நகைகள்:

பகவான் கிருஷ்ணர் ஒரு இளவரசர், எனவே உங்க குழந்தைக்கு கழுத்து, கைகள், கால்களுக்கு பொருத்தமான நகைகளை போட்டு விடுங்கள். பிளாஸ்டிக் நகைகள் கூட கடைகளில் விற்பனை செய்கிறார்கள் அதை வாங்கி போட்டுவிடலாம். அல்லது வீட்டிலேயே கூட பேப்பர் நகைகளை செய்து போட்டுவிடலாம். ஏனென்றால், குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது, உலோக நகைகளை பயன்படுத்தினால் அரிப்பு, ஒவ்வாமையை ஏற்படுத்தும். நகையே வேண்டாம் என்று நினைப்பவர்கள் வீட்டில் மஞ்சள் நிற செவ்வந்தி, சாமந்தி பூ இருந்தால் அதை அழகாக கட்டி கை, கால், கழுத்து, தலையில் கிரீடமாகவும் கட்டிக் கொள்ளலாம். 

ஒப்பனை: 

கிருஷ்ணர் தோற்றத்தின் அடுத்த இன்றியமையாத பகுதி 'திலகம்' ஆகும். அதாவது பொட்டு. சந்தனத்தை கரைத்து நெற்றியில் அழகாக வைத்து விடுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்