Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Krishna Jayanthi Sweet Recipe in Tamil: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 'நெய் பணியாரம்' செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan August 24, 2023 & 01:30 [IST]
Krishna Jayanthi Sweet Recipe in Tamil: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 'நெய் பணியாரம்' செய்வது எப்படி?Representative Image.

Krishna Jayanthi Sweet Recipe in Tamil: ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் உலகம் முழுவதும் இருக்கும் பக்தர்களால் ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் ஆவண மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மங்களகரமான நாளில் கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக படைக்கும் நெய் பணியாரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது இந்த இனிப்பு பணியார அப்பத்தை வீட்டிலேயே மிகவும் சுவையாகவும் எளிமையாகவும் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

Also Read: உங்க செல்ல குழந்தைகளுக்கான கிருஷ்ணர் காஸ்ட்யூம் ஐடியாஸ்...!!

தேவையான பொருட்கள்:

வெல்லம் - 1 கப் (பொடித்தது)

பச்சரிசி - 1 கப்

கோதுமை மாவு - 2 டேபிஸ் ஸ்பூன்

தேங்காய் - 1/2 கப்

ஏலக்காய் - 2

நெய் - தேவைக்கு ஏற்ப

வாழைப்பழம் - 2

எள்ளு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)

தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)

உப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பச்சரிசியை எடுத்து நன்றாக சுத்தம் செய்து 2-3 மணி நேரம் ஊற வையுங்கள்.  3 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, பொடித்து வைத்திருந்த வெல்லத்தை சேர்த்து, அது கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கிவிடுங்கள்.

வடிகட்டி எடுத்து வைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். பிறகு, அதுலையே துருவிய தேங்காய், வாழைப்பழம், ஏலக்காய், கோதுமை மாவு, கொஞ்சமாக உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை ஆறியதும் வடிகட்டி ஊற்றி எல்லாவற்றையும் ஒரு சுற்று சுற்றி பணியார மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்ப கட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

ரெடியான மாவை அப்படியே 2 மணி நேரம் ஊற விடுங்கள். அதன்பிறகு, அந்த மாவுடன் வறுத்த எள்ளு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை நெய்யில் பொன்னிறமாக வதக்கி அதனையும் நெய்யுடன் அந்த மாவில் சேர்த்து கொள்ளுங்கள். 

இப்போது, குழிப் பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். காய்ந்தது, பணியார மாவை ஒவ்வொரு குழியிலும்  ஊற்றி, இருபுறம் நன்றாக வேகவிட்டு, சிவக்க வெந்ததும் எடுத்து விடுங்கள். அவ்வளவு தான்! சுவையான இனிப்பு பணியாரம் ரெடி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்