Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க உதடு வெடுத்து வறண்டு போய் இருக்கா..?

Nandhinipriya Ganeshan August 08, 2022 & 11:05 [IST]
உங்க உதடு வெடுத்து வறண்டு போய் இருக்கா..? Representative Image.

Tips for Smooth Lips: குளிர், வறண்ட வானிலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை உங்கள் உதடுகளை மிகவும் வறண்டதாக மாற்றுகிறது. சில நேரங்களில், அடிக்கடி உதடுகளை நக்குவதும் இந்த பிரச்சனையை மோசமாக்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும்? மிகவும் எளிது, விரைவான நிவாரணத்திற்காக பல்வேறு வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

இதற்காக நீங்க அதிகம் செலவு செய்ய வேண்டியது இருக்காது. உங்கள் உதடுகளின் வெடிப்பைக் குறைக்க உதவும் சில எளிய மற்றும் நிரூபிக்கப்பட்ட வீட்டு வைத்தியங்களை (lip care routine at home) நாங்கள் வழங்கியுள்ளோம். உதடுகளில் ஏற்படும் வெடிப்பு மற்றும் உலர்ந்த உதடுகளை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

பால்

பாலில் கால்சியம், வைட்டமின் பி13, பொட்டாசியம் மற்றும் பல பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மையளிக்கிறது. 1-2 டீஸ்பூன் பச்சைப் பால் எடுத்து, அதனுடன் மஞ்சள் தூள் கலந்து, அந்த பேஸ்ட்டை உலர்ந்த உதடுகளின் மீது தடவவும்.

பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவிடுங்க. இதை தினமும் செய்து வர இது உங்கள் உதடுகளுக்கு ஈரப்பதத்தையும் மென்மையையும் (lips smooth tips) கொடுக்கும். அதே சமயத்தில், அதிகளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதும் அவசியம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இதன் காரணமாக இது அற்புதமான ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. பாதாம் எண்ணெய்யை தினமும் பயன்படுத்தி வர மென்மையான உதடுகளை பெறலாம். அதற்கு, விரல் நுனியில் சிறிதளவு பாதாம் எண்ணெயை எடுத்து உதடுகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். மிருதுவான மற்றும் மென்மையான உதடுகளைப் பெற தினமும் இரவு படிக்கும் முன் இதை செய்து பாருங்க.

தேங்காய் எண்ணெய்

குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பு மற்றும் வறண்ட உதடுகளைத் தடுக்க நாம் அடிக்கடி லிப் பாம் மற்றும் ஈரப்பதமூட்டும் கிரீம்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவை இரசாயனங்கள் நிறைந்தவை. எனினும், தேங்காய் எண்ணெய் சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பல வழிகளில் உதவு புரிகிறது.

இது பாக்டீரியாவை அளித்தல், அழற்சியை குணமாக்குதல் என மற்ற நன்மைகளையும் வழங்குகிறது. உங்களுடைய உதடை மென்மையாக மாற்ற தினமும் உதடுகளில் தேங்காய் எண்ணெயை தடவி வாருங்கள். இது உதடுகளின் வெடிப்பைக் குணப்படுத்தவும், அவற்றை ஹைட்ரேட் செய்யவும் உதவு செய்யும்.

உதடுகளை ஸ்க்ரப் பண்ணுங்க

வறண்ட மற்றும் வெடிப்பு உதடுகளை தடுக்க, இயற்கையான பொருட்களை கொண்டு உங்க உதடுகளை மெதுவாக உரிக்கவும்(Exfoliate). இது எளிமையான மற்றும் பயனுள்ள முறையாகும். இப்போது உங்க உதடுகளை அழகாக்க வீட்டிலேயே லிப் ஸ்க்ரப் செய்யலாம் வாங்க..

ஒரு பவுளில் 1-2 டீஸ்பூன் தூள் உப்பு அல்லது சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு காட்டன் துணியால் இந்த கலவையை உங்க உதட்டில் தடவி, சில நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.

பின்னர், ஒரு ஈரமான துணியை கொண்டு துடைத்து எடுக்கவும். இதை வாரத்தில் இருமுறை தொடர்ந்து செய்து வர உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் வெளிவந்து புதிய செல்கள் வளர தொடங்கும். இதனால், உங்களுக்கு கவர்ச்சியான, மிருதுவான உதடு (beautiful lips without lipstick) கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்