Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

How to Get Rid of Dandruff Naturally at Home in Tamil: பொடுகை விரட்டி அடிக்கும் சில எளிமையான இயற்கை வீட்டு வைத்தியங்கள்.... ட்ரை பண்ணி பாருங்க...!

Nandhinipriya Ganeshan August 03, 2022 & 17:45 [IST]
How to Get Rid of Dandruff Naturally at Home in Tamil: பொடுகை விரட்டி அடிக்கும் சில எளிமையான இயற்கை வீட்டு வைத்தியங்கள்.... ட்ரை பண்ணி பாருங்க...!Representative Image.

How to Get Rid of Dandruff Naturally at Home in Tamil: நம்மில் பலருக்கு கோடைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி தலையில் பொடுகு அதிகமாக ஏற்படுவது உண்டு. இது பல மாதங்களாக நாம் பராமரித்து வந்த பளபளப்பான கூந்தலின் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல், பொடுகு இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அப்போது நாம் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணெய் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும். பொடுகுக்கு எதிராக நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், முடி உதிர்தல், முடி உடைதல், தோல் எரிச்சல் மற்றும் தலையில் கொப்புளம் போன்ற மற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

உச்சந்தலையில் இருந்து இறந்த செல்கள் அதிகமாக உதிர்வதை தான் நாம் பொடுகு என்று அழைக்கிறோம். பொடுகு பொதுவாக உச்சந்தலை வறண்டு இருந்தால் ஏற்படும். எனவே, நமது உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஷாம்பு மற்றும் பிற டிரீட்மெண்ட பொடுகை ஓரளவு போக்கினாலும், முழுமையாக குணப்படுத்தாது. எனவே, பொடுகை குணப்படுத்த சில இயற்கை வீட்டு வைத்தியங்களை (homemade dandruff treatment in tamil) ஒருமுறை முயற்சி செ ய்து பாருங்கள். இதனால் பொடுகு நீங்குவதோடு, உங்கள் கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும். 

பொடுகில் இருந்து விடுபட சில இயற்கை வழிகள் இதோ:

கற்றாழை 

கற்றாழையில் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் பல்வேறு வகையான பூஞ்சை மற்றும் ஈஸ்ட் மூலம் பொடுகுத் தொல்லையை உண்டாக்கும் தொற்றுநோய்களிலிருந்தும் உச்சந்தலையை பாதுகாக்கின்றன. கற்றாழை அரிப்பை தடுத்து உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதோடு, குளிர்ச்சியையும் தருகிறது. 

 • கற்றாழை ஜெல்லை நேரடியாகவு அல்லது சிறிதளவு தேங்காய் எண்ணெயுடனோ கலந்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். 
 • அதை மறுநாள் காலையில் சிறிதளவு ஷாம்பூவை பயன்படுத்தி முடியை அலாசி விடுங்கள். 
 • இவ்வாறு வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து செய்துவந்தால் அற்புதமான பலன் கிடைக்கும். 

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரின் அமிலத்தன்மை, உச்சந்தலையில் முடி வேர்களுக்குள் பூஞ்சை வளர்ச்சியை எதிர்த்துப் போராடுகிறது. 

 • ஆப்பிள் சைடர் வினிகரை சம அளவு தண்ணீரில் கலந்து உச்சந்தலையில் தடவவும். 
 • ஒரு 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் லேசான ஷாம்பு கொண்டு வாஷ் செய்து விடுங்கள்.
 • இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், விரைவாக பொடுகை விரட்டலாம்.

பூண்டு

பூண்டில் இருக்கு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு பொடுகை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எளிதில் அகற்ற உதவுகிறது. 

 • 7 முதல் 8 பூண்டு பல்களை எடுத்து நசுக்கிக்கொள்ளுங்கள். இதனுடைய வாசனை பலருக்கு பிடிக்காமல் இருக்கும். 
 • அதனால், 6 டேபிள் ஸ்பூன் தேன் எடுத்து அதனுடன் கலந்து, அந்த கலவையை உச்சந்தலையில் தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
 • பின்னர், முடியை கொஞ்சமாக ஷாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது, அவை பொடுகை எதிர்த்துப் போராடி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. 

 • தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக காய்ச்சி கொண்டு, அதில் 2 ஸ்பூன் லெமன் ஜூலை ஊற்றி கலக்கவும்.
 • அதை தலை சருமத்தில் வைத்து நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடங்களுக்கு பின் தலையை தண்ணீரில் அலசுங்கள்.
 • இந்த சிகிச்சை முடியின் பசைத் தன்மையை குறைத்து, பொடுகை ஒழித்து, கூந்தலை ஜொலிக்க செய்யும்.

வெங்காய ஜூஸ்

வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது உச்சந்தலையில் தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இழந்த ஊட்டச்சத்துக்களை திரும்ப பெற உதவுகிறது. மேலும், இது தலையில் ஏற்படும் அரிப்புகளை விரைவில் குறைக்கிறது.

 • 3 டேபிள் ஸ்பூன் வெங்காயச் சாறு, 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை கலந்துக் கொள்ளுங்கள்.
 • இவற்றை உச்சந்தலையில் தடவி சிறிது மசாஜ் செய்து, 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைத்து, பின்னர் ஷாம்பு கொண்டு அலசவும்.
 • வாரத்திற்கு இரண்டு முறை இதை முயற்சி செய்துவந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 

வெந்தயம்

வெந்தயத்தில் வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உங்க தலைமுடியை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. மேலும், உலர்ந்த தலையை ஈரப்பதமாகவும், தலைமுடியை உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

 • இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 • இந்த கலவையை முடியிலும், தலை சருமத்திலும் படுமாறு தேய்த்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். 
 • பின் 30 நிமிடங்கள் கழித்து முடியை நன்கு தண்ணீரில் அலச வேண்டும். 
 • இந்த சிகிச்சையை தொடர்ந்து 4 வாரங்கள் மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆயில் மசாஜ்

பொதுவாக, எண்ணெய் பசை தலையில் இல்லையென்றால் பொடுகு விரைவில் வந்துவிடும். இதனால், தான் தலைக்கு குளித்த அடுத்த நாளே எண்ணெய் பூச சொல்கிறார். அதைவிட, வாரத்திற்கு ஒருமுறை ஆயில் மசாஜ் செய்து வந்தாலே தலையில் இயற்கை எண்ணெய் உற்பத்தி அதிகரித்து பொடுகை தடுத்து (dandruff natural treatment in tamil), முடி உதிர்வையும் குறைக்கும். மேலும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். 

 • நீங்க தலைக்கு குளிப்பதற்கு முந்தைய நாள் இரவு, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சம பங்கு கலந்து உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
 • அடுத்த காலை வழக்கம் போல் ஷாம்பு வாஷ் பண்ணிகோங்க. இவ்வாறு செய்துவர பொடுகே வரமால் தடுக்க முடியும்.

Tags:

How to remove dandruff naturally in tamil, How to remove dandruff in tamil, Home remedies for dandruff, How to reduce dandruff in tamil, Dandruff treatment in tamil, How to cure dandruff permanently in tamil, How to get rid of dandruff naturally in tamil, How to remove dandruff permanently in tamil, How to remove dandruff from hair naturally in tamil, Dandruff treatment at home in tamil, Dandruff Home Remedies in Tamil, homemade dandruff treatment in tamil, dandruff natural treatment in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்