Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பீட்ரூட், கேரட், கத்திரி மட்டும் காய்கறி இல்ல... நம் கண்களுக்கு தென்படாத சத்து நிறைந்த காய்களும் அதன் பயன்களும்..

Nandhinipriya Ganeshan August 17, 2022 & 16:45 [IST]
பீட்ரூட், கேரட், கத்திரி மட்டும் காய்கறி இல்ல... நம் கண்களுக்கு தென்படாத சத்து நிறைந்த காய்களும் அதன் பயன்களும்..Representative Image.

காய்கறிகள் என்றாலே சத்து தான் என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில், காய்கறிகள் என்று எடுத்துக் கொண்டால் பீட்ரூட், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் மட்டும் தான் நம் கண்களுக்கு தெரிகிறது. ஆனால், நம் கண்களுக்கு புலப்படாத பல்வேறு வகையான சத்து நிறைந்த காய்கறிகள் நிறைய இருக்கின்றன. இந்த காய்கறிகள் நாம் அன்றாடம் வாங்கும் காய்கறிகளை காட்டிலும் விலையும் மலிவு தான். அந்த வகையில், நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் பிற காய்கறிகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். 

கோவைக்காய்:

இன்றையக் காலத்தில் பெரும்பாலானோர் தவிர்க்கும் காய்கறிகளில் ஒன்று தான் இந்த கோவைக்காய். இதன் மருத்துவக் குணம் தெரியாமல் பலரும் இதை சாப்பிடுவதே கிடையாது. ஏன் வாங்குவதே கிடையாது. இது மற்ற காய்கறிகளை போன்று விலை அதிகம் கிடையாது. ஆனால், ஏராளமான நற்குணங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. இந்த காய்கறியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் உடலிலுள்ள நச்சுகளை அகற்றும் சக்தி கொண்டவை. இரத்த ஓட்டத்தை சீராக்குவதில் பெஸ்ட். அதுமட்டுமல்லாமல், நுரையீரல் மற்றும் அலர்ஜியால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது இந்த கோவைக்காய். இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை வேறோடு அழிக்கக்கூடியது. வளரும் இளம் பருவத்தினருக்கு இந்த காயை சீரான இடைவெளியில் சமைத்துக் கொடுப்பது நல்லது. 

வாழைப்பூ:

வாழைப்பூவில் கால்சியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகள் அதிகளவில் காணப்படுகின்றன. பெண்களின் கர்பப்பபை பிரச்சனைகளை குறைப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது இந்த வாழைப்பூ. அதேப்போல், நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூவை நன்றாக சமைத்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகச் சுரந்து, இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து மற்றும் புரத சத்து அதிகம் இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு குறைந்தது வாரத்தில் ஒருமுறையாவது சமைத்துக் கொடுப்பது நல்லது. மேலும், இரத்த மூலநோய் இருப்பவர்கள் இதை வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த மூலம் விரைவில் குணமாகும். 

பூசணிக்காய்:

வைட்டமின் ஏ தெளிவான கண்பார்வைக்கு அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து. பூசணிக்காயில் இச்சத்து அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, கண் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்க பூசணிக்காயை தினமும் சாப்பிடுங்கள். மேலும், இதில் இருக்கும் வைட்டமின் கே இருதய பிரச்சனைகளையும் தடுக்கக் கூடியது. காயோடு மட்டுமல்லாமல், அதன் விதையும் நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, ஆண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையான ஆண்மைக் குறைவை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பூசணி விதைகள்.  தூக்கப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பூசணிக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வாழைக்காய்: 

நார்ச்சத்தும் மாவுச்சத்தும் அதிகம் கொண்ட வாழைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்க முடியும். மேலும், வைட்டமின் சி, ஏ மற்றும் ஃபோலேட் சத்தும் இதில் அதிகளவில் காணப்படுகின்றன, அதனால் கர்ப்பிணி பெண்களுக்கு ரொம்ப நல்லது. ஆனால், இதை வறுவலாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அதிக உடல் எடைக்கு வழிவகுக்கும். எனவே, பொரியலாகவோ, குழம்பில் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். 

நூல்கோல்:

நூல்கோல் பார்ப்பதற்கு முட்டைகோஸ் போன்றே இருக்கும். இதில் அதிகளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை அதிகமாக யாரும் உணவில்  சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், இந்த காயில் தான் வைட்டமின், நார்ச்சத்து, மற்றும் பல விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குளிர்காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு இந்த நூல்கோல். மேலும், இதை சமைக்காமல் சாப்பிடுவதன் மூலம் செரிமான சக்தியை மேம்படுத்தும். இதில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது சமைத்துக் கொடுப்பது நல்லது. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு.

Tags:

Banana flower benefits in tamil, Valaipoo Benefits in tamil, Noolkol vegetable in tamil, Noolkol benefits in tamil, kovakkai benefits in tamil, kovakkai medicinal uses in tamil, valakkai benefits in tamil, green banana health benefits in tamil, poosanikai benefits in tamil, Pumpkin Benefits in Tamil, pumpkin seeds benefits in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்