Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: 'உப்பு சீடை' செய்வது எப்படி? | Krishna Jayanthi Special 2023

Nandhinipriya Ganeshan August 17, 2022 & 14:15 [IST]
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: 'உப்பு சீடை' செய்வது எப்படி? | Krishna Jayanthi Special 2023Representative Image.

 Krishna Jayanthi Special Recipes: மகா விஷ்ணு பூமியின் பாரத்தை குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி நாளில் ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த புனித நாளை தான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்று பலவித பெயர்களில் இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி இவ்வாண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் கிருஷ்ணரை புஷ்பங்களால் அலங்கரித்து, அவருக்கு பிடித்த பல பலகாரங்களை வீட்டில் செய்து நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வகையில், கிருஷ்ணருக்கு பிடித்த உப்பு சீடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

உங்க செல்ல குழந்தைகளுக்கான கிருஷ்ணர் காஸ்ட்யூம் ஐடியாஸ்...!!

தேவையானப் பொருட்கள்:

பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்

ஓமம் - 1/2 டீஸ்பூன்

பச்சரிசி - 300 கிராம்

கட்டிப் பெருங்காயம் - சிறுதுண்டு

உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன் (வறுத்து அரைத்தது)

வெள்ளை எள்ளு - 1 டீஸ்பூன் (வறுத்தது)

சிவப்பு மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

தேங்காய் துருவல் - சிறிதளவு

அனுதினமும் பாதாம் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...

செய்முறை:

முதலில், பச்சரிசியைக் கழுவி தண்ணீர் வடித்து, நிழலில் காய விடுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதை அரைத்து, மாவைச் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். 

பின்னர், கட்டிப் பெருங்காயத்தை பொடித்து சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, அடுப்பில் வாணலியை வைத்து பச்சரிசி மாவை எண்ணெய் எதும் விடாமல் சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். 

பின்பு, அதில் மிளகாய் விழுது, வெண்ணெய், ஓமம், உப்பு, எள்ளு, பொட்டுக்கடலை மாவு, தேங்காய் துருவல், உளுத்தம் மாவு, மற்றும் பெருங்காயக் கரைசலையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.  சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் ஐந்து ஐந்து உருண்டைகளாக பொரித்து எடுத்தால் ஓமம்-உப்பு சீடை ரெடி.

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 'நெய் பணியாரம்' செய்வது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்