Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Agneepath Scheme in Tamil: அக்னிபாத் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு….! இராணுவத்தில் இருக்கும் புதிய ஒப்பந்த முறை….!

Gowthami Subramani June 15, 2022 & 12:35 [IST]
Agneepath Scheme in Tamil: அக்னிபாத் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு….! இராணுவத்தில் இருக்கும் புதிய ஒப்பந்த முறை….!Representative Image.

Agneepath Scheme in Tamil: இந்திய பாதுகாப்புத்துறை வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில், 25% ஒப்பந்த முறையில் நியமிப்பதற்காக அரசு வழிவகுக்கிறது.

அக்னிபாத் திட்டம்

மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை ராணுவத்துறையில் அமல்படுத்தியுள்ளது. இதன் படி, நியமனங்களில் 25% அளவிற்கு ஒப்பந்த முறையில் நியயமிப்பதற்கான திட்டத்திற்கு வழி வகுத்துள்ளது (Agneepath Scheme in Tamil).

இதற்கு முன்னரே, பாதுகாப்புத் துறை அமைச்சராக விளங்கிய ராஜ்நாத் சிங்க், அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த திட்டத்தில் உள்ள அடிப்படை நடைமுறைகளிலேய ஆட்கள் சேர்க்கப்படும் என செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

எவ்வாறு செயல்படுத்தப்படும்

இந்தத் திட்டம் முப்படைத் தளபதிகள் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும். இது கடந்த வாரம் பிரதமர் மோடியிடம் முப்படைத் தளபதிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது (Agneepath Scheme).

மேலும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர். இவ்வாறு பணியில் இருக்கும் அக்னி வீரர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். மேலும், இவர்களுக்கு ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை ஊதியத் தொகை வழங்கப்படும்.

வயது வரம்பு

இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 45,000 பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயது வரை இருக்கும் (Schemes in Indian Army).

அவர்களுக்கு வழங்கப்படும் மொத்த பணியாண்டுகளான 4 ஆண்டுகளில் 6 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது (Agneepath Recruitment 2022 Qualification). அதன் படி, 4 ஆண்டுகள் கழித்து இந்த வீரர்களில் 25% பேர் வரை, ராணுவத்துறையில் நிரந்தர பதவி காலமாக 15 ஆண்டுகால ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள். மேலும், இவர்கள் ஆபிசர் இல்லாத ரேங்கில் வேலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது (Agneepath Recruitment Apply Online).

மீதி 75% பேர்

மேலும், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி, நிரந்த பணிக்கு தேர்வாகாத மீதம் இருக்கும் 75 சதவீத அக்னி வீரர்கள், பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். பொதுவாக, ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 5.2 லட்சம் கோடி ரூபாயில் கிட்டத்தட்ட பாதிக்கு பணியாட்களின் சம்பளம் மற்றும் பென்ஷனுக்கே செல்கிறது. இந்த அக்னிபாத் திட்டத்தின் மூலம், இந்தத் தொகை பெரிய அளவில் குறைக்கப்படும் என கூறப்படுகிறது (Indian Army Schemes).

ராணுவ தளவாட பொருள்களைப் பெற

இந்த புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்தின் மூலம் சேரும் ராணுவ வீரர்களுக்குத் தரக்கூடிய சம்பளம், மற்ற நிரந்தர வீரர்களுக்குத் தரக்கூடிய சம்பளத்தை விட குறைவாகவே இருக்கும் (Agneepath Scheme UPSC). இதன் காரணமாக, மத்திய அரசுக்கு செலவு குறையும் என கூறப்படுகிறது. மேலும் இதன் வழியாக மிச்சமாகும் தொகையை ராணுவ தளவாடப் பொருள்கள் வாங்க பயன்படுத்த முடியும் எனவும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது (Agneepath Scheme Benefits in Tamil).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்