Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச படிப்பு தாட்கோ அறிவிப்பு

Priyanka Hochumin Updated:
அரசு தேர்வுகளுக்கு தயாராகும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச படிப்பு தாட்கோ அறிவிப்புRepresentative Image.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) நடத்தும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார்.

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச படிப்பு தாட்கோ அறிவிப்புRepresentative Image

தேர்வுகள்

2023 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL),

2023 ஆண்டுக்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு (SSC MTC - 2023),

2023 ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு முதல்நிலை (CHSL (10+2) Examination), இளநிலை பொறியாளர் (SSC JE) உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு தேதி

எஸ்எஸ்சி வெளியிட்ட தேர்வு அட்டவணையின் படி, 2023 Multi-Tasking non-technical staff தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஜுலை 14ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் 2023 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நிலை - I தேர்வு நடைபெறும்.

அதே போல், SSC CGL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மே 1ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யலாம். நிலை - I தேர்வு ஜூன்/ஜுலை மாதங்களில் நடைபெற உள்ளது.

SSC CHSL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மே மாதம் 9ம் தேதி வெளியிடப்படும். இந்த தேர்வில் பங்கேற்க விரும்பினால் ஆன்லைன் வாயிலாக ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற முடியும். தேர்வானது ஜுலை/ஆகஸ்ட் மாதங்களில் நிலை- I எழுத்துத் தேர்வு நடைபெறும்.

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச படிப்பு தாட்கோ அறிவிப்புRepresentative Image

இலவச படிப்பு

இந்த தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தேர்வு பயிற்சித் திட்டத்தை இலவசமாக தாட்கோ நிறுவனம் தர உள்ளது. எப்படி என்றால், இப்பயிற்சிக்கான மொத்த செலவுகளையும் தாட்கோ நிறுவனம் ஏற்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

யார் பதிவு செய்யலாம்

இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 32 வயது வரையில் உள்ள 10, 12 மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மற்ற விவரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதில் கலந்துக் கொண்டு தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்