Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நல்லதோ கெட்டதோ.. அஸ்வினின் தேர்வுக்கு காரணம் இது தான்.. விளக்கும் ஆகாஷ் சோப்ரா!!

Sekar August 15, 2022 & 18:44 [IST]
நல்லதோ கெட்டதோ.. அஸ்வினின் தேர்வுக்கு காரணம் இது தான்.. விளக்கும் ஆகாஷ் சோப்ரா!!Representative Image.

2022 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பெர்பார்மன்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும், ஆனால் இந்திய அணியில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார். 

அஸ்வின் ஒயிட்-பால் அணியில் அவ்வப்போது வந்துவந்து செல்கிறார். இந்நிலையில், அவர் மிக முக்கியமான போட்டியில் சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஜூன் 8 அன்று, இந்திய நிர்வாகம் ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை சில எதிர்பார்க்கப்பட்ட மற்றும் சில ஆச்சரியமான பெயர்களுடன் குறிப்பிட்டது. நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இடம் பெறாத நிலையில், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். 

காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டதால் பலர் ஆச்சரியப்பட்டனர். யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிக குறைவாகவே உள்ளனர். 

இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது எனும் சூழலில் சாஹல்-ஜடேஜா, போட்டியின் பெரும்பகுதிக்கு உபயோகப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அஸ்வின் மற்றும் பிஷ்னோய் ஆகியோர் பெஞ்சில் உட்காரவைக்கப்படுவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

அஸ்வின் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் மூன்றில் இடம்பெற்றார். அவர் 7.18 என்ற சுவாரசியமான எகானமி ரேட்டில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் பேட்டிங்கிலும் நன்றாக செயல்பட்டார். 

மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் மற்றும் கடைசி டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் அவரைச் சேர்ப்பது நிர்வாகத்தின் அவுட்-ஆஃப்-பாக்ஸ் முடிவு என்று சோப்ரா நினைக்கிறார்.

“ரவிச்சந்திரன் அஸ்வின் - கடந்த உலகக் கோப்பையிலும் அவர் திடீரென தேர்வு செய்யப்பட்டார். இங்கேயும் உலகக் கோப்பைக்கு சற்று முன்பு வெஸ்ட் இண்டீஸ் சென்று இப்போது ஆசியக் கோப்பை அணியில் இருக்கிறார், மீண்டும் உலகக் கோப்பையில் விளையாடுவார், அதுதான் தெரிகிறது. யார் நல்லவர் அல்லது யார் கெட்டவர் என்பதைப் பற்றியது அல்ல, ஆனால் உங்களுக்கு என்ன வகையான ஸ்பின்னர் தேவை என்பதுதான் முக்கியம்." என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் கூறினார்.

ஆடும் பிளேயிங் 11'இல் அஸ்வினின் பங்கையும் சோப்ரா சுட்டிக்காட்டினார். ரசிகர்கள் அவரிடமிருந்து விக்கெட் எடுக்கும் பாத்திரத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர் தற்காப்பு ஆட்டத்தில் அற்புதங்களைச் செய்வார் என்று அவர் கூறினார். 

"நீங்கள் அவருக்கு ஒரு தற்காப்பு பாத்திரத்தை வழங்குகிறீர்கள் என்றால், அவர் அதை கச்சிதமாக செய்வார். ஆனால் நீங்கள் அவரிடமிருந்து விக்கெட்டுகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அது நடக்காமல் இருக்க தயாராக இருங்கள். நீங்கள் அவருக்கு என்ன பாத்திரத்தை வரையறுக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.” என்று அவர் முடித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்