Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீட்டின் நுனிக்கு வந்த ரசிகர்கள்.. ஆஷஸ் முதல் போட்டியில் ஆஸி. அணி த்ரில் வெற்றி!

Iravaadhan Updated:
சீட்டின் நுனிக்கு வந்த ரசிகர்கள்.. ஆஷஸ் முதல் போட்டியில் ஆஸி. அணி த்ரில் வெற்றி!Representative Image.

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரின் 5ஆம் நாள் ஆட்டத்தில் 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 107 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் , கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. மழை மற்றும் ஈரப்பதமான ஆடுகளம் காரணமாக, ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுப்பாக விளையாடி வந்த நிலையில், நைட் வாட்ச்மேன் போலாந்த் 20 ரன்களில் வெளியேறினார்.

இங்கிலாந்துக்கு பயம் காட்டி வந்த டிராவிஸ் ஹேட் 16 ரன்கள் எடுத்திருந்த போது மோயின் அலி பந்தில் கேட்ச் ஆனார். இதே போன்று அரண் போல் நின்று கொண்டு இருந்த உஸ்மான் கவாஜாவும் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரியும் 20 ரன்களில் ஜோ ரூட் பந்துவீச்சில் அவரிடமே பிடிப்பட்டார்.

சீட்டின் நுனிக்கு வந்த ரசிகர்கள்.. ஆஷஸ் முதல் போட்டியில் ஆஸி. அணி த்ரில் வெற்றி!Representative Image

இங்கிலாந்து வெற்றிக்கு கைவசம் 2 விக்கெட்டுகள் தேவைப்பட, ஆஸ்திரேலிய வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஸ்டோக்ஸ் ஒரு கடினமான கேட்சை தவறவிட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 2 சிக்சர், 3 பவுண்டரிகளை அடிக்க, அவருக்கு லயான் சிறப்பாக துணை நிற்க, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள், 20க்கும் கீழ் குறைந்தது. இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

எனினும் லயான், கம்மின்ஸ் ஜோடி கூலாக நின்று, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டனர். கைவசம் 3 ஓவர்கள் எஞ்சி இருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில், டிக்ளேர் செய்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

2005ஆம் ஆண்டு இதே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. அந்த தோல்விக்கு மருந்தாக அதே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அசத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்