Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
0.00sensex(0.00%)
நிஃப்டி22,402.40
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

ரஞ்சி கோப்பையில் தமிழநாட்டுக்கு எதிராக களமிறங்கும் ஜடேஜா..!!

Sekar Updated:
ரஞ்சி கோப்பையில் தமிழநாட்டுக்கு எதிராக களமிறங்கும் ஜடேஜா..!!Representative Image.

ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நாளை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி எலைட் குரூப் பி போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாட உள்ளார்.

இதற்காக நேற்று சென்னைக்கு வந்த ஜடேஜா, வணக்கம் சென்னை என ட்வீட் செய்துள்ளார். ஆல்ரவுண்டர் ஜடேஜா நீண்ட காலமாக காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடற்தகுதிக்கு உட்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தான் சார்ந்த சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட் ரஞ்சி டிராபியில் பங்கேற்க முடியாததால், அவருக்கு பதிலாக விளையாட உள்ளார். 

ஜடேஜா கடைசியாக நவம்பர் 2018 இல் ரஞ்சி டிராபியில் விளையாடினார். மேலும் வரவிருக்கும் போட்டியில் அவரது பணிச்சுமை தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிவுறுத்தல்களின்படி கண்காணிக்கப்படும்.

ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை 2022 போட்டியின் போது பாதியில் வெளியேறியதால், ஆகஸ்ட் 2022 முதல் இந்திய அணியில் இருந்து விலகி உள்ளார். டி20 போட்டியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-டெஸ்ட் தொடருக்கு ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். உடற்தகுதிக்கு உட்பட்டு ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட அணியில் ஆல்-ரவுண்டர் நியமிக்கப்பட்டார்.

ஜடேஜா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடமி அறிவித்த பிறகு, சென்னையில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ரஞ்சி டிராபி போட்டிக்கு முன்னதாக எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தனது சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

இந்த போட்டியில் சத்தேஷ்வர் புஜாரா மற்றும் அவர்களின் கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது. புஜாரா மற்றும் உனத்கட் இருவரும் 17 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு இந்தியா இரண்டாவது முறையாக முன்னேறும் வாய்ப்பு உள்ளது. ஜூலை மாதம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும்.

ஜடேஜா டெஸ்ட் அணியின் ஒருங்கிணைந்த உறுப்பினராக இருந்து, பல ஆண்டுகளாக அஷ்வினுடன் வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கி வருவதால், ஜடேஜா அணியில் இடம் பெறுவது இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்புகளுக்கு முக்கியமாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்