Asia Cup 2022 : ஹாங்காங் கிரிக்கெட் அணி இந்திய பேட்டர் விராட் கோலிக்கு ஒரு இதயப்பூர்வமான மெசேஜை அனுப்பியதோடு, ஹாங்காங் அணியின் ஜெர்சியையும் பரிசாக அளித்தது.
சூர்யகுமார் யாதவின் அபாரமான 68 (நாட் அவுட்) விராட் கோலியின் 59 (நாட் அவுட்) மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் வேகமான பீல்டிங்கின் மூலம் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2022 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 கட்டத்திற்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றது.
ஜெர்சியில், "விராட், ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்! நம்பமுடியாத நாட்கள் பல உள்ளன. வலிமையுடன். அன்புடன் - ஹாங்காங் அணி" என குறிப்பிட்டு விராட் கோலிக்கு ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளனர்.
இந்த பரிசை கண்டு மகிழ்ச்சியடைந்த கோலி, ஹாங்காங் அணியின் பரிசுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…