Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜா.. 30 மாதங்களில் 13 சதங்கள்.. விராட் கோலியை தூக்கி சாப்பிட்ட ஜோ ரூட்! | Joe Root

Iravaadhan Updated:
டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜா.. 30 மாதங்களில் 13 சதங்கள்.. விராட் கோலியை தூக்கி சாப்பிட்ட ஜோ ரூட்! | Joe RootRepresentative Image.

பர்மிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலேயே சதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

2014ஆம் ஆண்டுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேப் 4 வீரர்கள் என்ற ஆஸ்திரேலிய அணிய்டின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆகியோர் கொண்டாடப்பட்டனர். இவர்கள் நான்கு பேருக்கும் இடையிலான போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நான்கு பேரும் கேப்டனாகவும் பதவி உயர்ந்த நிலையில், 4 வீரர்களுக்கும் இடையிலான போட்டி கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

அதில் விராட் கோலி மட்டும் மற்ற 3 வீரர்களை கடந்தும் அதிக ரன்களை விளாசினார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என்று விராட் கோலி சதம் அடிக்காத மைதானங்களே இல்லை என்ற அளவிற்கு உயர்ந்தார். ஆனால் திடீரென 27வது சதத்திற்கு பின் விராட் கோலியின் ஆட்டம் சுணங்கியது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜா.. 30 மாதங்களில் 13 சதங்கள்.. விராட் கோலியை தூக்கி சாப்பிட்ட ஜோ ரூட்! | Joe RootRepresentative Image

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக விராட் கோலி சொல்லிக் கொள்ளும்படியாக விளையாடவில்லை. ஆனால் ஜோ ரூட் கடந்த மூன்று ஆண்டுகளாக அசாத்தியங்களை நிகழ்த்தி வருகிறார். கடந்த 30 மாதங்களில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இணைந்து மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 சதங்களை மட்டுமே விளாசியுள்ளனர். ஆனால் கடந்த 30 மாதங்களில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 13 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என்று அனைத்து நாடுகளிலும், அனைத்து மைதானங்களிலும் சோலோவாக ஷோ காட்டி வருகிறார். இதனால் விராட் கோலியின் ஆட்டம் கிரிக்கெட்டில் முடிவடைந்தது என்றும், அந்த இடத்தை ஜோ ரூட் பிடித்துவிட்டதாகா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்