Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Asia Cup 2022 : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை! இந்தியா தோல்வி...!

Sekar September 06, 2022 & 19:08 [IST]
Asia Cup 2022 : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை! இந்தியா தோல்வி...!Representative Image.

Asia Cup 2022 : இலங்கை அணியிடம் தோற்று தனது ஆசிய கோப்பை கனவை தகர்த்துள்ளது இந்திய அணி. இனி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது மிக மிக கடினம்.

சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இன்று இலங்கையை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

முதல் போட்டியில் தோற்றதால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே தீரவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மறுபுறம், இலங்கை, சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வலுவான ஆப்கானிஸ்தானுக்கு ஆசிய கோப்பையில் முதல் தோல்வியை பரிசளித்து வலுவாக உள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் அனல் பறந்தது. தொடக்கமே இந்திய அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது. கே எல் ராகுல் வழக்கம் போல சொற்ப ரன்களில் அவுட் ஆனார். 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் நடையைக் கட்ட, கோலியோ ரன்னே எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். 

கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கை அளிக்கும் வகையில், அடித்து ஆடி அதிரடி அரைசதம் அடித்தார். அவருடன் ஆடி வந்த சூர்யகுமாரும் தனது பங்குக்கு ஒரு பக்கம் சீராக விளையாடினார். இதனால் அணியின் ஸ்கோர் படபடவென உயர்ந்தது. 

தூரத்தில் நம்பிக்கை ஒளி கீற்று தென்படும் சமயத்தில் அடுத்தடுத்து ரோஹித், சூர்யகுமார் விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. ரோஹித் சர்மா 41 பந்துகளில் 72 ரன்களும், சூர்யகுமார் 29 பந்துகளில் 34 ரன்களும் எடுத்திருந்தபோது அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் போராடிய நிலையிலும் மொத்த ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 173 ரன்களாக இருந்தது.

பின்னர் ஆடிய இலங்கை அணி வீரர்கள் பதும் நிஸ்ஸங்க , குசல் மெண்டிஸ் இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி கிட்டத்தட்ட இந்தியாவின் கனவை நொறுக்கிவிட்டனர். இருவருமே கிட்டத்தட்ட 110 ரன்களை எடுத்திருந்தனர்.  பானுக ராஜபக்ச தனது பங்குக்கு 25 ரன்களும்,  தசுன் ஷனக 33 ரன்களும் எடுத்து இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

பிளேயிங் XI 

இந்தியா : கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

இலங்கை : பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சரித் அசலங்க, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்