Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Asia Cup 2022 Schedule: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு… இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை எப்போ தெரியுமா?

Nandhinipriya Ganeshan August 02, 2022 & 18:45 [IST]
Asia Cup 2022 Schedule: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு… இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை எப்போ தெரியுமா?Representative Image.

Asia Cup 2022: ஆசியாவில் உள்ள கிரிக்கெட் அணிகள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி ஆசிய கோப்பை 2022. இந்த மாபெரும் போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி செப்டர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆசிய கிரிக்கட் கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், ஆசிய கோப்பை 2022 இல் ஆறு அணிகள் பங்கேற்கின்றன, இந்த போட்டிகள் அனைத்தும் டி20 வடிவத்தில் நடத்தப்பட உள்ளன. இப்போது, ஆசிய கோப்பை 2022 அட்டவணை, தேதி மற்றும் நேரம், கிரிக்கெட் அணிகள், இடம் போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

Asia Cup 2022 Teams Cricket:

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் மற்றொரு அணி ஆகிய 3 அணிகளும் உள்ளன. பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

Asia Cup 2022 Date and Time:

தொடக்கப் போட்டி – ஆகஸ்ட் 27, 2022

இறுதிப் போட்டி – செப்டம்பர் 11, 2022

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.

Asia Cup 2022 Venues:

இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் சர்வதேச ஸ்டேடியம், ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் அபுதாபி கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற மூன்று முக்கிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Asia Cup 2022 Schedule:

ஆகஸ்ட் 27: இலங்கை vs ஆப்கானிஸ்தான் (Group B) - துபாய்

ஆகஸ்ட் 28: இந்தியா vs பாகிஸ்தான் (Group A) - துபாய்

ஆகஸ்ட் 30: பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் (Group B) - ஷார்ஜா

ஆகஸ்ட் 31: இந்தியா vs குவாலிஃபயர் (Group A) - துபாய்

செப்டம்பர் 1: இலங்கை vs பங்களாதேஷ் (Group B) - துபாய்

செப்டம்பர் 2: பாகிஸ்தான் vs குவாலிஃபயர் (Group A) – ஷார்ஜா

இத்துடன் லீக் சுற்று முடிவடைகிறது. இந்த சுற்றின் முடிவில் க்ரூப் ஏ மற்றும் க்ரூப் பி ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த 4 அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதும்.

செப்டம்பர் 3: B1 vs B2 - ஷார்ஜா

செப்டம்பர் 4: A1 vs A2 - துபாய்

செப்டம்பர் 6: A1 vs B1 - துபாய்

செப்டம்பர் 7: A2 vs B2 - துபாய்

செப்டம்பர் 8: A1 vs B2 - துபாய்

செப்டம்பர் 9: B1 vs A2 - துபாய்

செப்டம்பர் 11: இறுதிப் போட்டி – துபாய்

Asia Cup 2022 Live Telecast and Broadcast Details:

இந்தியா - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்

பாகிஸ்தான் - பிடிவி ஸ்போர்ட்ஸ் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ்

பங்களாதேஷ் - காசி டிவி (ஜிடிவி)

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து - Yupp TV

தென்னாப்பிரிக்கா -சூப்பர்ஸ்போர்ட் நெட்வொர்க் 

யுஎஸ்ஏ மற்றும் யுகே -ஹாட்ஸ்டார்

மத்திய கிழக்கு - ஓஎஸ்என் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்

Tags:

Asia cup 2022 schedule, Asia cup 2022 schedule date and time, Asia cup 2022, Men’s asia cup 2022, Asia Cup 2022 Schedule, Asia cup 2022 Date And Time, Where to watch asia cup 2022, Asia cup 2022 teams list, Asia cup 2022 live telecast in india, Asia cup cricket 2022 live streaming


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்