Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Asia Cup Cricket 2022 : பாகிஸ்தானுடன் முதல் மோதல்.. சாதிக்குமா இந்தியா?

Sekar August 26, 2022 & 18:13 [IST]
Asia Cup Cricket 2022 : பாகிஸ்தானுடன் முதல் மோதல்.. சாதிக்குமா இந்தியா?Representative Image.

Asia Cup Cricket 2022 : இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்திய அணி வலுவாக இருந்தாலும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானும் குறை சொல்ல முடியாத அளவிற்கு பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் மிக வலுவாகவே உள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பரபரப்பு எகிறி கிடக்கிறது.

ஆனால் ஆசியக் கோப்பை போட்டியின் கடந்தகால வரலாற்றில் பார்த்தால், இந்தியாவே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது தெரியும். இரு அணிகளும் மொத்தம் 14 முறை மோதிய நிலையில், இந்தியா 8 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஒரு போட்டி மட்டும் முடிவு இல்லாமல் முடிந்தது.

முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில் இந்திய வீரர்கள் ஷஹீன் அப்ரிடியிடம் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்த சில தருணங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.

முழங்கால் காயம் காரணமாக 2022 ஆசிய கோப்பையில் இருந்து அப்ரிடி வெளியேறினார். அவர் சிகிச்சையில் இருந்த நிலையில், கேப்டன் பாபர் அசாமின் விருப்பத்தின்படி, துபாயில் நடக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக அவர் அணியுடன் இருக்கிறார்.

அந்த வீடியோவில் யுஸ்வேந்திர சாஹல் முதலில் அப்ரிடியிடம் வருகிறார். இரண்டு வீரர்களும் தொடர்பு கொள்கிறார்கள், பின்னர் கைகுலுக்கினர். அப்போது விராட் கோலியும் வந்து, அவரது காயம் குறித்த தகவல்களை கேட்டு நீண்ட நேரம் அவரிடம் பேசினார். பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஷாஹீன் அப்ரிடி இருவரும் சந்திக்கிறார்கள்.

ரிஷப் பண்ட் அஃப்ரிடியின் காயத்தை சுட்டிக்காட்டுகிறார். இதற்குப் பிறகு, அணியின் துணைத் தலைவர் கே.எல் ராகுலும் ஷாஹீன் அப்ரிடியுடன் கைகுலுக்கி, அவரது காயம் குறித்து விசாரிப்பதைக் காணலாம்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்