Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இங்கிலாந்து ரசிகர்களின் சீண்டல்கள்.. ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பதிலடி! | Australia Captain Cummins

Iravaadhan Updated:
இங்கிலாந்து ரசிகர்களின் சீண்டல்கள்.. ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பதிலடி! | Australia Captain CumminsRepresentative Image.

லண்டன்: இங்கிலாந்து ரசிகர்களின் பாடல்கள், கோஷங்கள் எதுவும் எங்களின் கவனத்தை சிதைக்காதென ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, அதனை முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஹெட்டிங்லே போட்டியில் நிகழ்ந்த சம்பவம் அப்படியே மாறி ஆஸ்திரேலிய அணி நிகழ்ந்துள்ளது. இதனிடையே இங்கிலாந்து ரசிகர்கள் ”Boring Aussie.. Boring” என்று  வம்புக்கு இழுக்க, களத்தில் சலனமே இல்லாமல் வெற்றியை தேடி கொடுத்தார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறுவதற்கு முதல் காரணம் உஸ்மான் கவாஜா என்றால், இரண்டாவது காரணம் கேப்டன் பேட் கம்மின்ஸ்தான். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 44 ரன்கள் விளாசியும் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்தார். அதேபோல் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டத்தை முறியடிக்க வழக்கம் போல் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டே போதுமானது என்று ஆஸி. அணி நிரூபித்து காட்டியுள்ளது.

இங்கிலாந்து ரசிகர்களின் சீண்டல்கள்.. ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பதிலடி! | Australia Captain CumminsRepresentative Image

இந்த வெற்றி குறித்து ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், இந்த வெற்றி 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் ஹெட்டிங்லே போட்டியை நினைவுபடுத்தவில்லை என்று கூறினால் அது பொய்தான். அந்தப் போட்டியில் வெற்றியை நழுவவிட்டது எப்போதும் சோகத்தையே கொடுக்கும். ஆனால் இன்று இந்த வெற்றி மருந்தாக அமைந்துள்ளது. ஓய்வறையில் உள்ள வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நிச்சயம் நம்பர் 1 அணி நாங்கள்தான் என்று நிரூபித்துள்ளோம். அதேபோல் என் வாழ்க்கையில் அடைந்த மிகச்சிறந்த வெற்றி இதுதான்.

கடந்த 2 ஆண்டுகளாக 20 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வருகிறோம். நாங்கள் எங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, சிறந்த அணியாக இருக்கிறோம். இந்த மைதானத்தில் ரசிகர்கள் எங்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் சில கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் அதனையும் மீறி எளிதாக வெற்றியை பெற்றுள்ளோம். ஒருவேளை முதல் நாளில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யவில்லை என்றால், இன்றைய நாளில் நான் அரைசதம் விளாசி இருப்பேன் என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்