Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாட்டா.. பை பை.. ஆசிய கோப்பையுடன் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட வீரர்!!

Sekar September 04, 2022 & 17:06 [IST]
டாட்டா.. பை பை.. ஆசிய கோப்பையுடன் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட வீரர்!!Representative Image.

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர்-பேட்டர் முஷ்பிகுர் ரஹிம் யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இருப்பினும் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். 

35 வயதான அவர் 102 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 19.5 சராசரி மற்றும் 115 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,500 ரன்கள் எடுத்தார். நடந்துகொண்டிருக்கும் ஆசியக் கோப்பை 2022 இல் அவர் விளையாடிய இரண்டு போட்டிகளில் முறையே 1 மற்றும் 4 என ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோற்று ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வங்காளதேசம் முன்கூட்டியே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ரஹீம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறேன். வாய்ப்பு வரும்போது ஃபிரான்சைஸ் லீக்குகளில் விளையாடுவேன். MR15 என்ற இரண்டு வடிவங்களில் எனது தேசத்தை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று ரஹீம் ட்வீட் செய்துள்ளார்.

ரஹீம் பல ஆண்டுகளாக பங்களாதேஷ் கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும் அவர் 2016 இல் இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் வங்காளதேசத்திற்காக சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார். 

அவர் சிறிது காலம் அணிக்கு கேப்டனாக இருந்தார் மற்றும் பங்களாதேஷின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இதற்கிடையில், ரஹீமின் ஓய்வு, பங்களாதேஷ் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை விட்டு விலகி, இளம் மற்றும் புதிய திறமைகளை கொண்டு வர வாய்ப்புள்ளது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கை சில வருடங்களுக்கு முன்னர் இளம் திறமையாளர்களுக்காக முதலீடு செய்து அதற்கான பலனை இப்போது அறுவடை செய்து வருகிறது. அதே போன்ற உத்தியை கையிலெடுக்க பங்களாதேஷும் திட்டமிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்