Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் கங்குலியை தலைவராக்க.. பிசிசிஐ விதிகளில் திருத்தம்.. உச்சநீதிமன்றம் அனுமதி!!

Sekar September 14, 2022 & 19:42 [IST]
மீண்டும் கங்குலியை தலைவராக்க.. பிசிசிஐ விதிகளில் திருத்தம்.. உச்சநீதிமன்றம் அனுமதி!!Representative Image.

தற்போதைய தலைவர் சவுரவ் கங்குலியின் பதவிக்காலத்தை நீட்டிக்க அனுமதிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது. 

முன்னதாக பிசிசிஐ'யில் ஒருமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தொடர்ச்சியாக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படாத சூழல் இருந்தது. இந்நிலையில், பிசிசிஐயில் தற்போது தலைவராக இருக்கும் கங்குலியின் மூன்றாண்டு பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது.

இந்நிலையில், கங்குலி மீண்டும் பதவியில் தொடர வழிவகை செய்ய, பிசிசிஐ சட்டத்தில் திருத்தம் முன்மொழியப்பட்டு அது உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒரு அலுவலகப் பொறுப்பாளர் தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும் என்று கூறியது. இதில் மாநில சங்கத்தில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் ஆகியவை அடங்கும்.

பிசிசிஐ மற்றும் ஸ்டேட் அசோசியேஷன் மட்டத்தில் ஒரு அலுவலகப் பொறுப்பாளர் தொடர்ந்து இரண்டு முறை குறிப்பிட்ட பதவியில் பணியாற்றலாம். அதன் பிறகு அவர் மூன்று ஆண்டுகள் கூலிங்-ஆஃப் காலத்தை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபத்தில் தெரிவித்தனர்.

நீதிபதிகள் மேலும், கூலிங்-ஆஃப் காலத்தின் நோக்கம் விரும்பத்தகாத ஏகபோகங்களை உருவாக்காமல் இருப்பதற்காகத்தான் என்றனர்.

இதன் மூலம், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்