Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிசிசிஐ அவசர மீட்டிங்கிற்கு அழைப்பு.. பைஜூஸ் ஸ்பான்சர்ஷிப்பை கழட்டி விட திட்டம்?

Sekar Updated:
பிசிசிஐ அவசர மீட்டிங்கிற்கு அழைப்பு.. பைஜூஸ் ஸ்பான்சர்ஷிப்பை கழட்டி விட திட்டம்?Representative Image.

பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சில் இன்று திடீரென அவசர கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த கூட்டத்தில் இந்திய அணிக்கான ஊடக உரிமைகள் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும், ஜெர்சி ஸ்பான்சர் பைஜுவுடனான எதிர்காலம் குறித்தும் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் நடைபெற உள்ளது. 

பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள பைஜூஸ் விரும்புகிறது. ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், பைஜூஸ் நிறுவனம் குறைந்தபட்சம் மார்ச் 2023 வரை தொடருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், பிசிசிஐ பைஜுவுடனான ஒப்பந்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வந்து, புதிய ஸ்பான்சரை தேர்வு செய்ய முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடி வரும் நிலையில், இலங்கை தொடர் முடியும் வரை பைஜஸ் ஸ்பான்சராக இருக்கும். அதன் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது தான் மாற்றப்படும் என கூறப்படுகிறது. சந்தை மதிப்பின்படி, இந்திய அணியின் தற்போதைய ஸ்பான்சர்ஷிப், கிரிக்கெட் விளையாடும் வேறு எந்த நாட்டையும் விட அதிக பிராண்ட் மதிப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ அறிக்கைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் புதிய ஸ்பான்சரை தேடும் மற்றும் வரும் நாட்களில் இதற்கான விண்ணப்பங்களை கோரலாம். இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பதால் புதிய ஸ்பான்சருக்கு பெரிய நிதி ஆதாயம் கிடைக்கும் என்பதால் பல நிறுவனங்களும் ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்ற போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்