Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜோ ரூட், பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக்.. முத்தான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லயன் அசத்தல்!

Iravaadhan Updated:
ஜோ ரூட், பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக்.. முத்தான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லயன் அசத்தல்!Representative Image.

பர்மிங்ஹாம்: ஆஷஸ் தொடரின் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஜோ ரூட், பேர்ஸ்டோவ் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸி. வீரர் நேதன் லயன் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.

ஆஷஸ் தொடரின்  முதல் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய கவாஜா 141 ரன்களும், அலெக்ஸ் கேரி 66 ரன்களும் சேர்த்தனர். இதனால் இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

ஜோ ரூட், பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக்.. முத்தான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லயன் அசத்தல்!Representative Image

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த நிலையில் மழை காரணமாக 3ஆம் நாள் ஆட்ட வீணானது. இதையடுத்து 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று வீசப்பட்ட முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்து அனைவருக்கும் ஜோ ரூட் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் மூலம் சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாசி அசத்தினார்.

இந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய அசாத்திய யார்க்கர் பந்தில் போப் 14 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜோ ரூட் 46 ரன்களில் லயன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த இளம் வீரர் ஹாரி ப்ரூக்கும் 46 ரன்களில் லயன் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேற, அதிரடி வீரர் பேர்ஸ்டோவும் 20 ரன்களில் லயன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் இங்கிலாந்து அணி 199 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. பர்மிங்ஹாம் பிட்சில் எந்த ஸ்விங்கோ, சுழலோ இல்லாத சூழலிலும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து வருகின்றனர். இதனால் இங்கிலாந்து அணியின் கைகளில் இருந்த ஆட்டத்தின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக ஆஸி. அணியின் கைகளுக்குள் வந்துள்ளது. இலக்கு 300 ரன்களுக்குள் இருக்கும் பட்சத்தில் ஆஸி. அணி எளிதாக முதல் போட்டியை வென்று முடிக்க வாய்ப்புகள் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்