Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆஸ்திரேலியாவில் பாலியல் அத்துமீறல்.. இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜாமீன்!!

Sekar November 17, 2022 & 13:54 [IST]
ஆஸ்திரேலியாவில் பாலியல் அத்துமீறல்.. இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜாமீன்!!Representative Image.

நவம்பர் 6ஆம் தேதி தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், ஆஸ்திரேலியாவின் சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றம் இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் போட்டிக்கு ஒரு நாள் கழித்து இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா சிட்னி போலீசாரால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

31 வயதான அவர் அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 11 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று சிட்னி டவுனிங் சென்டரில் உள்ள சிறைச்சாலையில் தோன்றி, $200,000 உத்தரவாதத்துடன் ஜாமீன் கோரிக்கையை முன்வைத்தார்.

இதையடுத்து, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர் தற்போதுள்ள சமூக ஊடக சுயவிவரங்கள் அல்லது டேட்டிங் சுயவிவரங்களை அணுகக்கூடாது, மேலும் அவரது பாஸ்போர்ட் சரண்டர் செய்துள்ளதால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாது போன்ற கடுமையான ஜாமீன் நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக தனுஷ்க குணதிலகா ஒரு பெண்ணுடன் டேட்டிங் செயலியில் தொடர்பு ஏற்பட்டு, அவர்கள் நவம்பர் 2 ஆம் தேதி ஒன்றாக ஊர் சுற்றிவிட்டு, இரவு 11 மணியளவில் சிட்னியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சம்பந்தப்பட்ட பெண் எவ்வளவோ வற்புறுத்தியும், பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

மறுநாள் காலையில் உதடுகளில் புண் மற்றும் வீக்கத்துடன் எழுந்த அந்தப் பெண், இரண்டு நண்பர்களை அழைத்து நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இதையடுத்து பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகக் கூறப்படும் மறுநாள் காலையில் அவர் ஒரு ஆலோசனை சேவையைத் தொடர்புகொண்டு தனது மருத்துவரைப் பார்த்தார். 

இதையடுத்து இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா கைது செய்யப்பட்டு, அவரது பாஸ்போர்ட் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார். அவர் இலங்கை தூதரகத்தில் தங்கியிருந்து இந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்