Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"அத்தனையும் பொய்யா கோப்பால்".. நெட்டிசன்களை ஜாலியாக கதறவிட்ட எலான் மஸ்க்!!

Sekar August 17, 2022 & 16:59 [IST]
Representative Image.

மிகவும் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க போவதாக தான் சொன்னது ஜோக் என எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

உலகின் டாப் கோடீஸ்வரராக இருக்கும் எலான் மஸ்க் டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ட்விட்டரை வாங்க முடிவு செய்து பின்னர் அதிலிருந்து பின்வாங்கியதும் உலக அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், பிரபல கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க போவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் கொளுத்திப் போட அது செம வைரலானது. 

மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் இந்த அணியை எலான் மஸ்க் வாங்க போவதாக சொன்ன செய்து காட்டுத் தீயாக பரவிய நிலையில், சில மணி நேரங்கள் கழித்து அதை சும்மா ஜோக்குக்காக சொன்னதாகவும், அதில் உண்மையில்லை என்றும் அவரே பதிவிட்டுள்ளார்.

No, this is a long-running joke on Twitter. I’m not buying any sports teams.

— Elon Musk (@elonmusk) August 17, 2022

எலான் மஸ்க்கின் இந்த விளையாட்டால் நொந்துபோன கால்பந்து ரசிகர்கள், "அத்தனையும் பொய்யா கோப்பால்" என நொந்தபடி, எலான் மஸ்கின் ட்வீட்டிற்கு பதில் போட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்