Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

சீறிப்பாய்ந்த காளைகள்.. தொடங்கியது 2023இன் முதல் ஜல்லிக்கட்டு!!

Sekar Updated:
சீறிப்பாய்ந்த காளைகள்.. தொடங்கியது 2023இன் முதல் ஜல்லிக்கட்டு!!Representative Image.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்து வரும் நிலையில், காளைகள் சீறிப்பாயும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை அடுத்த தச்சன்குறிச்சி என்ற பகுதியில், புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த 2 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியது. 

எனினும், உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக, 2 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. 

இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று காலை 8 மணிக்கு வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

2023 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான இதை தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 700க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்